பதிவு செய்த நாள்
30 மே2016
07:43
பி.பி.எல்., நிறுவனம் லாபம் ரூ.3.94 கோடிபி.பி.எல்., நிறுவனம், 2016 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 3.94 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 2.85 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்த நிறுவனத்தின் விற்பனை, 189.50 சதவீதம் உயர்ந்து, 4.57 கோடி ரூபாயில் இருந்து, 13.23 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த முழு நிதியாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு, 8.45 கோடி ரூபாயாகவும், விற்பனை, 40.36 கோடி ரூபாயாகவும் உள்ளது.
குஜராத் அல்கலிஸ் லாபம் ரூ.114 கோடிகுஜராத் அல்கலிஸ் அண்டு கெமிக்கல்ஸ், சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 114.70 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 96.31 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே காலத்தில், இந்த நிறுவனத்தின் விற்பனை, 11.56 சதவீதம் உயர்ந்து, 487.60 கோடி ரூபாயில் இருந்து, 543.97 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த முழு நிதியாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், 221.67 கோடி ரூபாயாகவும், விற்பனை, 1,955.97 கோடி ரூபாயாகவும் உள்ளது.
தரணி சுகர்ஸ் விற்பனை ரூ.103 கோடிதரணி சுகர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் விற்பனை, சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 103.02 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 67.87 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர லாபம், 36.65 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கடந்த முழு நிதியாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு, 11.71 கோடி ரூபாயாகவும், விற்பனை, 363.99 கோடி ரூபாயாகவும் உள்ளது.
ஜெட் ஏர்வேஸ் லாபம் ரூ.1,173 கோடிஜெட் ஏர்வேஸ் இந்தியா, சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த முழு நிதியாண்டில், 1,173.56 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இதே காலத்தில், இந்த நிறுவனத்தின் விற்பனை, 1,844.22 கோடி ரூபாயில் இருந்து, 19,556.50 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர லாபம், 397.16 கோடி ரூபாயாகவும், விற்பனை, 4,842.30 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இந்தியா சிமென்ட்ஸ் விற்பனை ரூ.1,147 கோடிஇந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் விற்பனை, சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 1,147.13 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 1,025.02 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்த நிறுவனத்தின் நிகர லாபம், 39.92 சதவீதம் உயர்ந்து, 36.60 கோடி ரூபாயில் இருந்து, 51.21 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த முழு நிதியாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர லாபம், 137.81 கோடி ரூபாயாகவும், விற்பனை, 4,226.85 கோடி ரூபாயாகவும் உள்ளது.
போர்ட்டிஸ் ஹெல்த்கேர் விற்பனை ரூ.1,061 கோடிபோர்ட்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில், 90.86 கோடி ரூபாயை நிகர இழப்பாக கொண்டு உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 17.53 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்த நிறுவனத்தின் விற்பனை, 1,049.46 கோடி ரூபாயில் இருந்து, 1,061.32 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. கடந்த முழு நிதியாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு, 24.85 கோடி ரூபாயாகவும், விற்பனை, 4,212.15 கோடி ரூபாயாகவும் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|