கைவிட்டது அரசு: தங்க நகைக்கு மூல வரி இல்லைகைவிட்டது அரசு: தங்க நகைக்கு மூல வரி இல்லை ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.12 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.12 ...
ஐ.எம்.டி., பட்­டியல்: போட்­டி­மிக்க பொரு­ளா­தார வளர்ச்­சியில் இந்­தியா 41வது இடத்­திற்கு முன்­னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2016
07:42

புது­டில்லி : சுவிட்­சர்­லாந்தைச் சேர்ந்த, ‘ஐ.எம்.டி., வேர்ல்டு காம்­பெட்­டிவ்னெஸ் சென்டர்’ நிறு­வனம் வெளி­யிட்­டுள்ள, இந்­தாண்டின், போட்­டி­மிக்க பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான சூழல் நிலவும் நாடுகள் பட்­டி­யலில், இந்­தியா, 41வது இடத்­திற்கு முன்­னே­றி­யுள்­ளது. கடந்த, 2015ல், இந்­தியா, 44வது இடத்தில் இருந்­தது.
ஒரு நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி, அரசின் செயல்­பாடு, சுல­ப­மாக வர்த்­தகம் புரி­வ­தற்­கான சூழல், அடிப்­படை கட்­ட­மைப்பு வச­திகள் ஆகிய நான்கு அம்­சங்­க­ளுடன், 5,400 நிறு­வன உய­ர­தி­கா­ரிகள், தங்கள் நாடு­களின் நிலை குறித்து கூறிய கருத்­துக்­களின் அடிப்­ப­டையில், ஐ.எம்.டி., பட்டியல் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.
7 அம்சங்கள்அதன் விவரம்: இந்­தியா ஏழு அம்­சங்­களில் சிறப்­பான முன்­னேற்றம் கண்­டு உள்ளது. டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பில், அதிக ஏற்ற, இறக்கம் இல்­லா­தது, நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றையை குறைத்­தி­ருப்­பது, நிதிப் பற்­றாக்­கு­றையை கட்­டுக்குள் வைத்­தி­ருப்­பது ஆகிய அம்­சங்­களில், இந்­தி­யாவின் செயல்­பாடு சிறப்­பாக உள்­ளது. அரசு நிர்­வா­கத்தில் லஞ்சம், ஊழல் ஆகி­யவை குறைந்­து உள்­ளன. வரி ஏய்ப்பு செய்வோர் மீதான நட­வ­டிக்கை தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதி­கா­ரத்தை பர­வ­லாக்கும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. சுல­ப­மாக தொழில் புரி­வ­தற்­கான சூழல் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது, இதன் கார­ண­மாக, இந்­தியா, குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்றம் கண்டு வரு­கி­றது.
வியா­பாரச் சூழல் மேம்­பட்டு வரு­வதால், இப்­பிரிவில், 2015ல், 33வது இடத்தில் இருந்த இந்­தியா, இந்­தாண்டு, 31வது இடத்­திற்குமுன்­னே­றி­யுள்­ளது. அது­போல, வேலை­வாய்ப்பில், 9ல் இருந்து, 5வது இடத்தை பிடித்­துள்­ளது.பொது மற்றும் தனியார் நிர்­வாக நடை­மு­றை­களில், 47வது இடத்தில் இருந்து, 36 ஆகவும், நிறு­வ­னங்­களின் செயல்­திட்டம் மற்றும் மதிப்பு உயர்வில், 23ல் இருந்து, 18ஆகவும் முன்­னேற்றம் கண்­டுள்­ளது. மேற்கு மற்றும் ஐரோப்­பிய நாடுகள் பல­வற்றை விட, இந்­திய பொரு­ளா­தாரம் சிறப்­பாக செயல்­பட்டு, 16வது இடத்­திற்கு முன்­னே­றி­யுள்­ளது. அன்­னிய முத­லீ­டு­களில், 31வது இடத்தில் இருந்து, 9வது இடத்­திற்கு சிறப்­பான முன்­னேற்றம் கண்­டுஉள்­ளது.
விலைவாசிஇருந்­த­போ­திலும், இதே காலத்தில்,இந்­தியா, நிதி செயல்­பா­டு­களில், 27வது இடத்தில் இருந்து, 33வது இடத்­திற்குதள்­ளப்­பட்­டுள்­ளது.அது­போல, விலை­வா­சியில், 37வது இடத்தில் இருந்து, 55வது இடத்­திற்கும், அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தியில், 53ல் இருந்து, 58வது இடத்­திற்கும் சரி­வ­டைந்­து உள்­ளது. எனினும், போட்­டி­மிக்க பொரு­ளா­தார சூழலை உரு­வாக்­கு­வ­தற்­கான அரசு கொள்­கைகள் மற்றும் நிர்­வாகச் செயல்­பா­டு­களில், இந்­தியா, 47வது இடத்­திற்கு முன்­னே­றி­யுள்­ளது. இவ்­வாறு அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
‘டாப் 10’ நாடுகள்ஹாங்காங்சுவிட்­சர்­லாந்துஅமெ­ரிக்காசிங்­கப்பூர்சுவீடன்டென்மார்க்அயர்­லாந்துநெதர்­லாந்துநார்வேகனடா

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)