ராணுவ தள­வா­டங்கள் தயா­ரிப்பு:குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்குபிர­கா­ச­மான வர்த்­தக வாய்ப்புராணுவ தள­வா­டங்கள் தயா­ரிப்பு:குறு, சிறு, நடுத்­தர ... ... எல் அண்டு டி இன்­சூரன்ஸ் நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்தும் எச்.டி.எப்.சி., எர்கோ எல் அண்டு டி இன்­சூரன்ஸ் நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்தும் எச்.டி.எப்.சி., ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
செல்­வந்­த­ராகும் அறி­வியல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2016
06:48

எண்­ணங்­களின் ஆற்­றலில் தான் எல்லாம் இருக்­கி­றது எனும் கருத்தை முன்­வைக்­கி­றது தனி­நபர் உலகில் சிறு காவியம் என வர்­ணிக்­கப்­படும், ‘தி சயின்ஸ் ஆப் கெட்டிங் ரிச்!’ வாலெஸ் டி வாட்டல்ஸ், எழு­திய இந்த புத்­தகம் காலத்தை கடந்து நின்று வளர்ச்சி மற்றும் செல்­வத்தை அடை­வ­தற்­கான ஊக்கம் அளிக்­கி­றது.செல்வ செழிப்பு பெறு­வ­தற்கு ஒரு அறி­வியல் இருக்­கி­றது. அல்­ஜீப்ரா அல்­லது கூட்டல் கழித்தல் போல அதுவும் துல்­லி­ய­மான அறி­வியல்தான். செல்வம் சேர்­வதை தீர்­மா­னிக்கும் விதிகள் சில இருக்­கின்­றன. இந்த விதி­களை கற்­றுக்­கொண்டு அவற்­றுக்கு கீழ்­ப­டிந்து நடக்கும் போது அவர் கணி­த­வியல் துல்­லி­யத்­துடன் பணக்­கா­ர­ரா­கலாம்.செயல்­களை குறிப்­பிட்ட விதத்தில் செய்­வதன் மூலம் பணம் மற்றும் சொத்தின் உரிமை வரு­கி­றது. தெரிந்தோ, தெரி­யா­மலோ குறிப்­பிட்ட வித­மாக செயல்­ப­டு­ப­வர்கள் பணக்­கா­ரர்­க­ளா­கின்­றனர். இதுவும் இயற்­கை­யான விதி­களை போன்­றது தான். எனவே, இந்த விதி­களை கற்­ப­வர்கள் நிச்­சயம் பணக்­கா­ர­ரா­கலாம்.பணக்­கா­ரா­வது சூழ்­நிலை பொருத்­தது அல்ல. அப்­படி இருந்தால் குறிப்­பிட்ட பகு­தியில் உள்ள எல்­லாரும் செல்­வந்­த­ராகி இருக்க வேண்டும். ஆனால், எல்லா இடங்­க­ளிலும் பணக்­கா­ரர்­களும், ஏழை­களும் இருக்­கின்­றனர். எனவே, சூழலை விட செயல்­படும் விதத்தில் தான் இது இருக்­கி­றது.மேலும், குறிப்­பிட்ட வித­மாக செயல்­ப­டு­வது திறமை சார்ந்­தது மட்டும் அல்ல. ஏனெனில் திறமை வாய்ந்த பலர் ஏழை­யா­கவே இருக்­கின்­றனர். செல்­வந்­த­ரா­வது சேமிப்­பினால் அல்­லது மற்­ற­வர்கள் செய்­யா­ததை செய்­வதால் வரு­வதும் அல்ல. ஆனால், எல்­லா­வற்­றையும் குறிப்­பிட்ட நோக்கில் செய்­வதால் வரு­வது.உலகில் வாய்ப்­பு­க­ளுக்கு குறை­வில்லை. எதிர்­நீச்சல் போடு­வர்­க­ளுக்கு அவை தயா­ராக உள்­ளன. செல்­வந்­த­ரா­வ­தற்­கான வளங்கள் இயற்­கையில் கொட்­டிக்­கி­டக்­கின்­றன. வடி­வ­மில்லா சக்­தி­யாக அவை நிறைந்­தி­ருக்­கின்­றன.வடி­வ­மில்லா சக்தி என்­பது அறிவு சார்ந்­தது. அது தான் சிந்­திக்­கி­றது. அது தான் மேலும் என விழை­கி­றது. உயிர்­களின் மேம்­பாட்­டிற்­காக தான் இயற்கை இருக்­கி­றது. எண்­ணங்கள் தான் மிகவும் முக்­கியம். மனிதன் தனது எண்­ணங்கள் மூலம் மற்றும் அவற்றை வடி­வ­மில்லா சக்தி மீது செலுத்­து­வதன் மூலம் தான் நினைப்­ப­வற்றை உரு­வாக்க முடியும்.ஒருவர் சிந்­திக்கும் விதமே அவர் செயல்­படும் விதத்தை தீர்­மா­னிக்­கி­றது. நீங்கள் செய்ய விரும்பும் வகையில் சிந்­திக்க வேண்டும் என்­பது தான் முக்­கியம். நம்­பிக்கை தான் எல்­லா­வற்­றுக்கும் மூலம்.உங்கள் செயல்­களை தீர்­மா­னிக்கும் வகையில் செல்­வந்­த­ராக வேண்டும் எனும் விருப்பம் உங்­க­ளுக்கு உறு­தி­யாக இருக்க வேண்டும். மன­த­ளவில் உரு­வ­கப்­ப­டுத்திக் கொண்­டீர்கள் என்றால் விரைவில் அதை நிஜத்தில்அடை­யலாம். உங்கள் மனதில் உரு­வாகும் சித்­தி­ரத்தை நம்­பிக்­கை­யுடன் நெஞ்சில் நிறுத்­திக்­கொள்­ளுங்கள். நேற்­றைய செயல்கள் பற்றி கவ­லைப்­படாமல் இன்­றைய செயல்­களை சிறப்­பாக செய்­வதில் கவனம் செலுத்­துங்கள்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)