பதிவு செய்த நாள்
25 ஜூன்2016
07:32
பெங்களூரு : ‘பெப்பர்பிரை டாட் காம்’ கூடுதலாக, 10 காட்சி மையங்களை துவக்க முடிவு செய்துள்ளது. பெப்பர்பிரை டாட் காம், இணையதள வணிகத்தின் மூலம், மரச்சாமான்களை விற்பனை செய்து வருகிறது. இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்தாலும், அவற்றின் தன்மை குறித்து, வாடிக்கையாளர்கள் நேரடியாக அறிந்து கொள்வதற்காக, காட்சி மையங்களை இந்நிறுவனம் அமைத்து உள்ளது. தற்போது, எட்டு இடங்களில் காட்சி மையங்கள் உள்ளன. மேலும், 10 மையங்களை துவக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாடிக்கையாளர்கள், காட்சி மையத்தில் பொருட்களின் உறுதி தன்மை குறித்து மட்டும் தெரிந்து கொள்ள முடியும். அங்கு, பொருட்கள் விற்கப்படாது. கடந்த ஆண்டில், 15 லட்சம் பொருட்களை விற்பனை செய்தோம். எங்கள் நிறுவனத்தின் வருவாய், 1,000 கோடி ரூபாயை தாண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|