1 லட்சம் கோடி ரூபாயை நெருங்கும் தமி­ழக சாப்ட்வேர் ஏற்­று­மதி  1 லட்சம் கோடி ரூபாயை நெருங்கும் தமி­ழக சாப்ட்வேர் ஏற்­று­மதி ... பிரிட்டன் வெளி­யேற்­றத்தால் தோல் ஏற்றுமதி பாதிப்பு பிரிட்டன் வெளி­யேற்­றத்தால் தோல் ஏற்றுமதி பாதிப்பு ...
பிரிட்டன் முடிவால் உருக்கு, வாகனம், மருந்து துறை­களில் இந்­திய நிறு­வ­னங்­க­ளுக்கு பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2016
07:34

புது­டில்லி : ‘ஐரோப்­பிய கூட்­ட­மைப்பில் இருந்து பிரிட்டன் வெளி­யேற உள்­ளதால், அங்கு உருக்கு, வாகனம், மருந்து உள்­ளிட்ட தொழில்­களில் ஈடு­பட்­டுள்ள இந்­திய நிறு­வ­னங்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­படும்’ என, வல்­லு­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.
பிரிட்­டனில் நடை­பெற்ற கருத்து ஓட்­டெ­டுப்பின் முடிவு, நேற்று வெளி­யா­னது. அதில், ஐரோப்­பிய கூட்­ட­மைப்பில் இருந்து வெளி­யேற, பெரும்­பான்­மை­யானோர் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர். இதை­ய­டுத்து, ஐரோப்­பிய கூட்­ட­மைப்பில் இருந்து விலக, பிரிட்டன் முடி­வெ­டுத்து உள்­ளது. இதனால், பிரிட்­டனில் செயல்­பட்டு வரும், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், சன் பார்மா, மதர்சன் சுமி உள்­ளிட்ட நிறு­வ­னங்­களின் விற்­பனை பாதிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இந்­நி­று­வ­னங்­களின் நடை­முறை செல­வி­னங்கள் அதி­க­ரிக்கும்; அவை, ஊழி­யர்­களை ஐரோப்­பிய நாடு­களில் உள்ள கிளை­க­ளுக்கு, பணிக்கு அனுப்­பு­வ­திலும், கட்­டுப்­பா­டு­களை சந்­திக்க நேரிடும். எனினும், ஐரோப்­பிய கூட்­ட­மைப்பில் இருந்து பிரிட்டன் முழு­வ­து­மாக வெளி­யேற இரண்டு ஆண்­டுகள் ஆகும் என்­பதால், பாதிப்­பு­களை சமா­ளிக்க, இந்­திய நிறு­வ­னங்கள் மாற்று ஏற்­பா­டு­களை செய்து கொள்ளும் என, தெரி­கி­றது. பெரும்­பா­லான இந்­திய நிறு­வ­னங்கள், பிரிட்­டனில் தொழிற்­சா­லை­களை நிறுவி, அங்­கி­ருந்து ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்து வரு­கின்­றன.
இனி, ஐரோப்­பிய கூட்­ட­மைப்பின் கட்­டுப்­பா­டு­க­ளுக்கு, பிரிட்­டனில் உள்ள இந்­திய நிறு­வ­னங்கள் கட்­டுப்­பட்டு நடக்க வேண்டும். இது, வர்த்­தக விரி­வாக்கம், வளர்ச்சி உள்­ளிட்­ட­வற்­றுக்கு கடி­வா­ள­மிடும்; ஏற்­று­மதி வருவாய் குறையும். டாடா குழு­மத்தைச் சேர்ந்த, ஜாகுவார் லேண்­டு­ரோவர் கார் தயா­ரிப்பு நிறு­வ­னத்தின் லாபம், அடுத்த நான்கு ஆண்­டு­களில், 147 கோடி டாலர் குறையும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பவுண்டு மதிப்பு அதி­ர­டி­யாக வீழ்ந்­துள்­ளதால், பிரிட்டன் உருக்கு பிரி­வுகள் விற்­பனை வாயி­லான, டாடா ஸ்டீல் நிறு­வ­னத்தின் வருவாய் குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. பிரிட்டன் விவ­கா­ரத்தால், நேற்று, இந்­திய பங்குச் சந்­தைகள் சரிவைக் கண்­டன; ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி அடைந்­தது.
* பிரிட்­டனில், 800க்கும் அதி­க­மான இந்­திய நிறு­வ­னங்கள் உள்­ளன. அவற்றில், 1.10 லட்­சத்­திற்கும் அதி­க­மானோர் பணி­யாற்­று­கின்­றனர்* இந்­தி­யாவின், பரஸ்­பர வர்த்­தக நாடு­களில், பிரிட்டன், 12வது இடத்தில் உள்­ளது * இரு நாடு­களும், பரஸ்­பர அன்­னிய நேரடி முத­லீட்டில், மூன்­றா­வது இடத்தில் உள்­ளன* இந்­தியா உபரி வர்த்­தகம் புரியும், 25 நாடு­களில், பிரிட்டன், 7வது இடத்தில் உள்­ளது * ஐரோப்­பிய கூட்­ட­மைப்பில், பிரிட்­டனில் தான் இந்­தியா அதிக அளவில் முத­லீடு செய்­துள்­ளது * உருக்கு, வாகனம், மருந்து, ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு, உணவு, குளிர்­பானம் உள்­ளிட்ட துறை­களில், இந்­திய நிறு­வ­னங்கள் முத­லீடு செய்­துள்­ளன* பிரிட்­டனின் முடிவு, 10 ஆயி­ரத்து, 800 கோடி டாலர் மதிப்­பி­லான இந்­திய ஐ.டி., துறையில், குறு­கிய காலத்­திற்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்.– நாஸ்காம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)