பதிவு செய்த நாள்
26 ஜூன்2016
01:57
சித்துார்:‘‘ஆந்திராவில் செயல்படுத்தப்படும், ‘உன்னாட்டி’ பண்ணை திட்டம் மூலம், ‘மாசா’ குளிர்பான பிராண்டு மதிப்பு, வரும், 2023 – 24ல், 100 கோடி டாலர் மதிப்புள்ளதாக மாறும்,’’ என, கோககோலா இந்தியா நிறுவனத்தின், தென்மேற்கு ஆசிய பிரிவு தலைவர் வெங்கடேஷ் கின்னி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஆந்திராவில், ‘யு.எச்.டி.பி.,’ என்ற நவீன வேளாண் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ், ‘தோதாபுரி, அல்போன்சா’ மாம்பழ வகைகள் விளைவிக்கப்படுகின்றன. இதில், குறைந்த பரப்பில் அதிக விளைச்சல் தரும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மாம்பழத்தின் பங்குஇதன் மூலம், அடுத்த ஏழு ஆண்டுகளில், 240 கிலோ டன் பழங்கள் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், மாசா குளிர்பானம் தயாரிப்பதற்கான மாம்பழங்கள் பெரும்பங்கு வகிக்கும். அத்துடன், ‘மினிட் மெய்டு’ குளிர்பானம் தயாரிக்க உதவும், ஆரஞ்சு பழங்களும், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.
மாசா குளிர்பானம், 100 கோடி டாலர் மதிப்புடைய பிராண்டாக வளர்ச்சி காண்பதற்கு, 1,100 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2 லட்சம் டன் மாங்கூழ் தேவைப்படும். இரண்டு லட்சம் டன் மாம்பழங்களை உற்பத்தி செய்வதன் மூலம், அதற்கு தேவையான மாங்கூழ் பெற முடியும். தற்போது, மாசா குளிர்பானம் தயாரிக்க, 650 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1 லட்சம் டன் மாங்கூழ் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 25 ஆயிரம் டன் மாங்கூழ், 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழகத்தில்...இந்தியாவில், கடந்த, 40 ஆண்டு களுக்கும் மேலாக, மாம்பழ குளிர்பான சந்தையில், 50 சதவீத சந்தைப் பங்களிப்புடன், மாசா தனிச்சிறப்புடன் கோலோச்சி வருகிறது. இந்தியாவில், கோககோலா நிறுவனம், கடந்த, 2012 முதல், 500 கோடி டாலர் முதலீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வரும், 2020க்குள் முடிக்கப்பட உள்ள, இந்த முதலீட்டு திட்டத்தில், மாசா பிராண்டு விரிவாக்க நடவடிக்கைகளும் அடங்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஐந்து புதிய திட்டங்களை செயல்படுத்த, நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இரண்டு மாங்கூழ் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|