பதிவு செய்த நாள்
29 ஜூன்2016
07:33
மும்பை : மும்பையில் உள்ள உலக வர்த்தக மையத்தில், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், உலக வர்த்தக மையம் உள்ளது. இங்கு, பெரிய தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், அதிக அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அந்த மையத்தில், சிறிய மற்றும் நடுத்தர பிரிவை சார்ந்த தொழில்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்து, மையத்தின் ஆலோசகர் குருவில்லா கூறியதாவது:இந்தியாவில், சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம், 80 சதவீத வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. அதேசமயம், அமெரிக்காவில், 50 சதவீதம்; சீனா, 79 சதவீதம் என்றளவில் தான் உள்ளது. எனவே, சிறு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|