அலு­மி­னிய துறை ஊக்­கு­விப்பு: குழு அமைக்க முடிவுஅலு­மி­னிய துறை ஊக்­கு­விப்பு: குழு அமைக்க முடிவு ... பெட்ரோல் நிலை­யத்தில் பசும்பால் ஹரி­யானா மாநி­லத்தில் அறி­முகம் பெட்ரோல் நிலை­யத்தில் பசும்பால் ஹரி­யானா மாநி­லத்தில் அறி­முகம் ...
மே மாதத்தில் கச்சா எண்ணெய், சிமென்ட் உற்­பத்தி குறைவு; முக்­கிய துறைகள் வளர்ச்சி 2.8 சத­வீ­த­மாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2016
08:32

புது­டில்லி : கடந்த மே மாதம், நாட்டின் முக்­கிய எட்டு துறை­களின் வளர்ச்சி, முந்­தைய ஐந்து மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, 2.8 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­துள்­ளது.
கச்சா எண்ணெய், நிலக்­கரி, இயற்கை எரி­வாயு, பெட்­ரோ­லிய சுத்­தி­க­ரிப்பு பொருட்கள், உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்­சாரம் ஆகி­யவை, முக்­கிய எட்டு துறை­க­ளாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன.
பின்னடைவுஇவை, நாட்டின் தொழில்­துறை உற்­பத்­தியை கணக்­கி­டு­வதில், 38 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டுள்­ளன. கடந்த மே மாதம், முக்­கிய எட்டு துறை­களின் வளர்ச்சி, 2.8 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­துள்­ளது. இது, முந்­தைய ஏப்ரல் மாதத்தில், நான்கு ஆண்­டுகள் காணாத வகையில், 8.5 சத­வீ­த­மாக உயர்ந்து இருந்­தது. கடந்த மே மாதம், கச்சா எண்ணெய் உற்­பத்தி வளர்ச்சி, மைனஸ், 3.3 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. அது­போல, இயற்கை எரி­வாயு உற்­பத்தி வளர்ச்­சியும், மைனஸ், 6.9 சத­வீ­த­மாக பின்­ன­டைவை கண்­டுள்­ளது. கடந்த ஆண்டு, இதே மாதத்தில், கச்சா எண்ணெய் உற்­பத்தி வளர்ச்சி, 0.8 சத­வீதம் என்ற அளவில், உயர்ந்து காணப்­பட்­டது. எனினும், இயற்கை எரி­வாயு உற்­பத்தி வளர்ச்சி மைனஸ் 3 சத­வீதம் என்ற அளவில் பின்­ன­டைவைக் கண்­டி­ருந்­தது.
இந்­தாண்டு, மே மாதம், பெட்­ரோ­லிய சுத்­தி­க­ரிப்பு பொருட்கள், சிமென்ட், மின்­சாரம் ஆகி­ய­வற்றின் உற்­பத்தி வளர்ச்சி, முறையே, 1.2 சத­வீதம், 2.4 சத­வீதம் மற்றும், 4.6 சத­வீதம் என்ற அளவில் இருந்­தது.கடந்த 2015, மே மாதம், பெட்­ரோ­லிய சுத்­தி­க­ரிப்பு பொருட்கள், சிமென்ட், மின்­சாரம் ஆகிய மூன்று துறை­களின் உற்­பத்தி வளர்ச்சி, முறையே, 7.8 சத­வீதம், 2.7 சத­வீதம் மற்றும், 6 சத­வீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்­பட்­டது. கடந்த மே மாதம், நிலக்­கரி உற்­பத்தி வளர்ச்சி, 5.5 சத­வீ­த­மாக இருந்­தது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 7.6 சத­வீதம் என்ற அளவில் அதி­க­மாக இருந்­தது.
வளர்ச்சிகடந்த ஆண்டு, மே மாதத்­துடன் ஒப்­பி­டும்­போது, இந்­தாண்டு அதே மாதத்தில், உரங்கள், உருக்கு ஆகிய இரு துறைகள் மட்­டுமே, உற்­பத்­தியில் வளர்ச்சி கண்­டுள்­ளன. உரங்கள் உற்­பத்தி, 14.8 சத­வீ­த­மா­கவும், உருக்கு உற்­பத்தி, 3.2 சத­வீதம் என்ற அள­விலும், வளர்ச்சி கண்­டுள்­ளன. நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டில், ஏப்., – மே மாதங்­களில், முக்­கிய எட்டு துறை­களின் வளர்ச்சி, 5.5 சத­வீ­த­மாக இருந்­தது. இது, கடந்த நிதி­யாண்டின் இதே காலத்தில், 2.1 சத­வீ­த­மாக இருந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)