பதிவு செய்த நாள்
29 ஜூலை2016
23:58
புதுடில்லி:அமெரிக்காவின், ‘போர்ப்ஸ்’ இதழ், உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், வலைதளத்தில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் அமேசான் நிறுவனத்தை நிறுவிய, ஜெப் பிசோஸ், முதன் முறையாக, மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரது சொத்து மதிப்பு, 6,530 கோடி டாலர்.
உலக பணக்காரர்கள் பட்டியலில், மூன்றாவது இடத்தில் இருந்த, பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் வாரன் பப்பெட், நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு, 6,490 கோடி டாலர்.வாரன் பப்பெட், இம்மாதம், பில் அண்டு மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளைக்கு, 286 கோடி டாலர் மதிப்புள்ள, பெர்க் ஷையர் நிறுவனத்தின் பங்குகளை, நன்கொடையாக வழங்கினார். அதனால், அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளது.
உலகின் ‘நம்பர் – 1’ பணக்காரர் என்ற பெருமையை, 7,777 கோடி டாலர் சொத்துகளுடன், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், தக்க வைத்துக் கொண்டுள்ளார். அடுத்த இடத்தில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அமன்சியோ ஆர்டெகா பிடித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|