ஜவுளி ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு புதிய சலு­கைகள்ஜவுளி ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு புதிய சலு­கைகள் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.08 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.08 ...
ஆசிய, ஆப்­ரிக்க நாடு­க­ளுக்கு ஏற்­று­ம­தி­யாகும் மருந்­து­க­ளுக்கு புதிய ‘பேக்­கேஜிங்’ விதி­முறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2016
07:25

மும்பை : மத்­திய அரசு, ஆசிய, ஆப்­ரிக்க நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­படும் மருந்­து­க­ளுக்­கான புதிய, ‘பேக்­கேஜிங்’ விதி­மு­றை­களை உரு­வாக்­கு­மாறு, இந்­திய பேக்­கேஜிங் மையத்­திற்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.
மருந்­து­களை பாது­காப்­பான உறைகள், பெட்­டிகள் ஆகி­ய­வற்றில் அடைத்து விற்­பது தொடர்­பான பயி­ல­ரங்கம், மும்­பையில் நடை­பெற்­றது.
அதில் பங்­கேற்ற, மத்­திய வர்த்­தக துறை இணை செயலர் சுதான்ஷு பாண்டே, பின் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசி­ய­தா­வது: இந்­தியா, மருந்து உற்­பத்­தியில் மூன்­றா­வது இடத்­திலும், அவற்றின் மதிப்பில், 13வது இடத்­திலும் உள்­ளது.
தடைக்கல்இந்­தி­யாவில் உற்­பத்தி செய்­யப்­படும் மருந்­து­களில், ‘ஜெனரிக்’ எனப்­படும், மூல மருந்­து­களின் பங்கு, 80 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக உள்­ளது. இத்­த­கைய மருந்­துகள் ஏற்­று­ம­தியில், அளவு அடிப்­ப­டையில், 20 சத­வீத பங்­க­ளிப்­புடன், இந்­தியா, முத­லி­டத்தில் உள்­ளது. சர்­வ­தேச மருந்து துறை, ஆண்­டுக்கு, 5 சத­வீத வளர்ச்சி கண்டு வரும் நிலையில், இந்­திய மருந்து துறை, 15 சத­வீத வளர்ச்­சியை கண்டு வரு­கி­றது. வரும், 2020ல், மிகப்பெரிய மருந்து சந்­தையை கொண்ட நாடு­களில், இந்­தியா, ஆறா­வது இடத்தை பிடிக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இத்­த­கைய வேக­மான வளர்ச்­சிக்கு தடைக் கல்­லாக, மருந்­து­களின் பேக்­கேஜிங் பிரச்னை உள்­ளது. மருந்­து­களின் பாது­காப்­பிற்கும், போலி மருந்­து­களை கட்­டுப்­ப­டுத்­தவும், உயர்­த­ர­மான பேக்­கேஜிங் முறை­களை பின்­பற்­று­வது அவ­சியம். அதில், கவ­னக்­கு­றை­வாக செயல்­படும் மருந்து நிறு­வ­னங்­களின் ஏற்­று­மதி பாதிக்­கப்­ப­டு­கி­றது.
சமீ­பத்தில், ‘சர்­வ­தேச விதி­மு­றைப்­படி பேக்கிங் செய்­யப்­ப­ட­வில்லை’ என, இந்­தியா அனுப்­பிய மருந்­து­களை, வியட்னாம் நிரா­க­ரித்­துள்­ளது. அதனால், அம்­ம­ருந்­து­களை திரும்பப் பெறும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. இது போன்ற பிரச்­னை­களை தவிர்க்க, ஆசிய, ஆப்­ரிக்க நாடு­க­ளுக்­கான மருந்து ஏற்­று­ம­திக்கு, புதிய பேக்­கேஜிங் தரக் கட்­டுப்­பாட்டு விதி­மு­றை­களை உரு­வாக்­கு­மாறு, இந்­திய பேக்­கேஜிங் மையத்­திற்கு, வர்த்­தக அமைச்­சகம் உத்­த­ர­விட்­டுள்­ளது.
அடுத்த ஆண்டில்...இதை­ய­டுத்து, புதிய பேக்­கேஜிங் விதி­மு­றை­களை உரு­வாக்கும் பணி துவங்­கி­யுள்­ளது. இது தொடர்­பாக, முன்­னணி மருந்து தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுடன், ஆலோ­சனை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. அடுத்த ஆண்டில், புதிய பேக்­கேஜிங் விதி­மு­றைகள் அம­லுக்கு வரும். சர்­வ­தேச தரக் கட்­டுப்­பாட்டு விதி­மு­றை­களை பின்­பற்றி, பேக்கேஜ் செய்­யப்­படும் இந்­திய மருந்­து­க­ளுக்கு, உலக நாடு­களில் வர­வேற்பு அதி­க­ரிக்கும்; இது, நாட்டின் மருந்து ஏற்­று­மதி வளர்ச்­சிக்கு உதவும். அத்­துடன், போலி மருந்­து­களால், இந்­திய மருந்து நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­படும் பாதிப்பும் குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)