பதிவு செய்த நாள்
02 அக்2016
00:16
சென்னை:கோ கேப்ஸ் கன்சீர்ஜ் நிறுவனம், சொகுசு கார்கள் வாடகை சேவையை துவக்கியுள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நரேஷ் கூறியதாவது:பாஸ்ட் டிராக்கின் துணை நிறுவனமான கோ கேப்ஸ் கன்சீர்ஜ், பி.எம்.டபிள்யூ., ஆடி, மெர்சிடஸ் பென்ஸ், ஜாகுவார், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட சொகுசு கார்களை வாடகைக்கு விட உள்ளது. தற்போது, சொகுசு காருக்கு, ஒரு மணி நேர வாடகை, 5,000 முதல் 6,000 ரூபாய் என்றளவில் உள்ளது. எங்கள் நிறுவனம், ஒரு மணி நேரத்துக்கு, 999 ரூபாய் மட்டும் கட்டணம் வசூலிக்கும்.முதல் கட்டமாக, 50 சொகுசு கார்கள் வாடகைக்கு விடப்பட்டு, 100 கார்களாக விரிவுபடுத்தப்படும். தற்போது, 50 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி போன்ற சுற்றுலா மையங்களுக்கு, ‘பேக்கேஜ்’ கட்டணம் விதிக்கப்படும். பாஸ்ட் டிராக், கோ கேப்ஸ் மூலம் சொகுசு கார்களை வாடகைக்கு, ‘புக்’ செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|