கட்­டு­மான பணி­களில் சுறு­சு­றுப்பு; சிமென்ட் தேவையில் விறு­வி­றுப்புகட்­டு­மான பணி­களில் சுறு­சு­றுப்பு; சிமென்ட் தேவையில் விறு­வி­றுப்பு ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு: 66.54 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு: 66.54 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
லிக்விட் பண்ட்கள் ஒரு அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2016
06:28

மியூச்­சுவல் பண்ட்­களில் பல­வி­த­மான திட்­டங்கள் இருப்­பதை நீங்கள் அறிந்­தி­ருக்­கலாம். முத­லீட்­டா­ளர்கள், தங்கள் தேவை மற்றும் நிதி இலக்­கு­களுக்கு ஏற்ப மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களை தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில், குறு­கிய கால இலக்­கு­களுக்கு முத­லீடு செய்ய லிக்விட் பண்ட்கள் ஏற்­ற­தாக கரு­தப்­ப­டு­கின்­றன. அவ­சர கால நிதி போன்­ற­வற்றை லிக்விட் பண்ட்­களில் முத­லீடு செய்ய வேண்டும் என்று பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கி­றது.
லிக்விட் பண்ட் என்றால் என்ன?இவையும் கடன் சார்ந்த மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களே. இந்த வகை பண்ட்கள் அரசு பத்­தி­ரங்கள், கரு­வூல பில்கள் போன்ற குறு­கிய கால நிதி சாத­னங்­களில் முத­லீடு செய்­கின்­றன. பெரும்­பாலும் 91 நாட்கள் வரை முதிர்வு கொண்ட நிதி சாத­னங்­களில் இவை முதலீடு செய்­கின்­றன. எளி­தாக பண­மாக்கி கொள்ளும் வாய்ப்­புடன், அதிக பலன் தரும் வகையில் முத­லீடு செய்ய வழி­செய்­வதே இவற்றின் முக்­கிய நோக்­க­மாக அமை­கி­றது. இந்த பண்ட்­க­ளுக்கு எண்ட்ரி மற்றும் எக்ஸிட் கட்­டுப்­பா­டுகள் கிடை­யாது. பெரும்­பாலும் இவற்றை ஒரு நாள் அவ­கா­சத்தில் பண­மாக்கி கொள்­ளலாம். வளர்ச்சி வாய்ப்பு மற்றும் பல­வித டிவிடெண்ட் வாய்ப்­பு­களை இவை கொண்­டுள்­ளன.
எப்­போது நாடலாம்?பொது­வாக குறு­கிய கால நோக்­கத்­துடன் முத­லீடு செய்ய இவை ஏற்­றவை. மூன்று மாத காலம் வரை முத­லீடு செய்ய நினைக்கும் போது இவற்றை நாடலாம். போனஸ் அல்­லது ரியல் எஸ்டேட் விற்­பனை மூலம் திடீ­ரென கையில் கிடைத்­தி­ருக்கும் பெரும் தொகையை எப்­படி பயன்­ப­டுத்­து­வது என தீர்­மா­னிப்­பதற்கு முன் இவற்றில் முத­லீடு செய்­யலாம். இவற்றில் ரிஸ்க் குறைவு. ஏற்ற இறக்­கங்­களும் அதிகம் கிடை­யாது.
பலன் எப்­படி?முத­லீட்­டா­ளர்கள் உட­ன­டி­யாக பணத்தை விலக்கி கொள்­ளலாம். அடுத்த பணி நாளில் வங்கி கணக்கில் பணம் சேர்ந்­து­விடும். பொது­வான கணக்­கு­படி, கடந்த ஓராண்டு காலத்தில் இந்த வகை பண்ட்கள் சரா­ச­ரி­யாக, 7.7 சத­வீத பலனை அளிப்­ப­தாக கரு­தப்­ப­டு­கி­றது. வங்கி சேமிப்பு கணக்கு வட்­டியை விட இது அதி­க­மா­னது.
யாருக்கு ஏற்­றவை?குறு­கிய கால அள­வி­லான முத­லீடு தேவை உள்­ள­வர்­க­ளுக்கு மிகவும் ஏற்­றது. கையில் கணி­ச­மான தொகை இருந்து, அதை வைப்பு நிதியில் முடக்கி வைக்க விரும்­பாத நிலையில் இவற்றை நாடலாம். சம­பங்கு மியூச்­சுவல் பண்ட்­களில் முத­லீடு செய்­ப­வர்­களும் சிஸ்­ட­மேட்டிக் டிரான்ஸ்பர் முறையில் இந்த திட்­டத்தில் முத­லீடு செய்யும் வழியை பின்­பற்றி வரு­கின்­றனர். பல நேரங்­களில் இவை வைப்பு நிதியை விட மேம்­பட்­டவை என்றும் கரு­தப்­ப­டு­கி­றது. வரி விதிப்பை பொறுத்­த­வரை, மூன்று ஆண்டு காலத்­திற்கு மேல் எனில் நீண்ட கால ஆதாய வரிக்கு தகு­தி­யு­டை­யவை. அதற்கும் குறை­வான காலத்தில் விலக்கி கொள்­ளப்­பட்டால், முத­லீடு செய்­ப­வரின் வரி வரம்­பிற்கு ஏற்ப, டிவிடெண்ட் வினி­யோக வரிக்கு உட்­பட்­டவை.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)