பதிவு செய்த நாள்
23 அக்2016
06:00
புதுடில்லி:மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த, பி.எஸ்.ஏ., என்ற இருசக்கர வாகன நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. மகிந்திரா அண்ட் மகிந்திராவின் துணை நிறுவனம், கிளாசிக் லெஜென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட். இந்நிறுவனத்தின் மூலம், மகிந்திரா, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இரு சக்கர வாகன நிறுவனமான, பி.எஸ்.ஏ., மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை, 28 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, மகிந்திரா நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:உலகில், பி.எஸ்.ஏ., என்ற பெயர் பரவலாக அறியப்பட்டது. அந்த பெயரை, மகிந்திரா தயாரிப்புகளில் பயன்படுத்தும் போது, எங்கள் நிறுவனத்துக்கு கூடுதல் வரவேற்பு இருக்கும். எனவே, மகிந்திராவின் துணை நிறுவனமான கிளாசிக் லெஜென்ட் மூலம், பி.எஸ்.ஏ., நிறுவனத்தின், 1.20 லட்சம் பங்குகள் கையகப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|