பதிவு செய்த நாள்
27 அக்2016
07:36
சான்பிரான்சிஸ்கோ : ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறியதாவது: ஆசியாவில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனைக்கு, சீனா, வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. ஆப்பிள் ஐபோன் விற்பனையில், சீனாவை போல, இந்தியாவை மாற்று வோம். இந்தியாவில், அதற்கான வர்த்தக வாய்ப்புகள் சிறப்பாக உள்ளன.
உலகளவில், ஐபோன் விற்பனை மந்தமாக உள்ள நிலையில், இந்தியாவில் அதன் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்தியாவில், செப்., வரையிலான ஓராண்டில், ஐபோன் விற்பனை, 50 சதவீதம் உயர்ந்துள்ளது. அதனால், இந்தியாவில் ஐபோன் விற்பனையில், நாங்கள் சுலபமாக வெற்றி பெறுவோம் என்றநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய ஸ்மார்ட் போன் விற்பனையில், தற்போது, ஆப்பிள் ஐபோன் பங்களிப்பு, 3 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது. இந்தியாவில், ஐபோன் – 5 போன்ற பழைய மாடல்கள், 20 ஆயிரம் ரூபாய் விலையில், அதிகளவில் விற்பனையாகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|