பதிவு செய்த நாள்
28 அக்2016
03:58
புதுடில்லி:கிராப்ட் ஸ்வில்லா டாட் காம், இணையதளம் வாயிலாக, சொந்ததயாரிப்புகளை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.கிராப்ட் ஸ்வில்லா டாட் காம், பாரம்பரிய ஆடைகள், வீட்டு அழகுசாதனம் உள்ளிட்ட பிரிவுகளில், பல நிறுவனங்களின் பொருட்களை இணையதளம் வாயிலாக விற்பனை செய்கிறது. தற்போது இந்நிறுவனம், தன் சொந்த தயாரிப்புகளை இணையதளத்தில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்து, அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மனோஜ் குப்தா கூறியதாவது:எங்கள் நிறுவனம், சொந்த பிராண்டில் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. இவற்றின் விற்பனை, 2017ல் இருந்து துவங்கும். நிறுவனத்தின் மொத்த விற்பனையில், எட்டு சதவீதம், பராம்பரிய ஆடைகள் மூலமும், 10 சதவீதம் உணவு மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் வாயிலாகவும் கிடைக்கிறது. 2017 மார்ச் முதல், விற்பனையை இரு மடங்கு அதிகரிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|