பதிவு செய்த நாள்
07 டிச2016
05:04
மும்பை:இந்திய வடிவமைப்பு துறை, 18,832 கோடி ரூபாய் அளவிலான வளர்ச்சியை, 2020ல் எட்டும், என இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.இந்திய வடிவமைப்பு துறை, 2020ல், 18,832 கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட துறையாக உருவெடுக்கும். அதில், தொழில் துறை வடிவமைப்பு பிரிவு மட்டுமே, 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சியை எட்டும் என, இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இக்கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: 11,681 கோடி ரூபாய் அளவுக்கு, சாத்தியமான வடிவமைப்பு துறை, 2020ல், 18,832 கோடி ரூபாய் என்றளவை எட்டும். இருப்பினும், இத்துறையின் தற்போதைய சந்தை மதிப்பானது, 2,100 கோடி ரூபாய் என்ற அளவில் தான் உள்ளது. அதாவது இன்னும், 80 சதவீதம் அளவுக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இவ்வாறு இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து, தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் இயக்குனர் பிரதியும்னா வியாஸ் கூறியதாவது:வடிவமைப்பு என்பது, ஒரு வணிகத்தின் மதிப்பை உருவாக்க வல்லதாகும். நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு பொருள், நன்கு வடிவமைக்கப்படாத பொருளை விட மதிப்பு மிக்கதாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|