உருக்கு பொருட்­க­ளுக்கு தரச்­சான்று ‘கெடு’  2 மாதங்கள் நீட்­டிப்புஉருக்கு பொருட்­க­ளுக்கு தரச்­சான்று ‘கெடு’ 2 மாதங்கள் நீட்­டிப்பு ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.44 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.44 ...
ஐரோப்பா, ஜப்­பானை விஞ்சி இந்­தியா 3வது இடம் பிடிக்கும் - உள்­நாட்டு வைர சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2016
01:22

மும்பை : ‘உள்­நாட்டு வைரச் சந்­தையில், ஐரோப்பா மற்றும் ஜப்­பானை விஞ்சி, இந்­தியா மூன்­றா­வது இடத்தை பிடிக்கும்’ என, பெய்ன் அண்ட் கம்­பெனி ஆய்­வ­றிக்கை தெரி­விக்­கி­றது.அதன் விபரம்:இந்­தி­யாவில், நகர்ப்­பு­றங்கள் வேக­மாக விரி­வ­டைந்து வரு­கின்­றன. அதற்­கேற்ப, தனி­நபர் வருவாய் அதி­க­ரித்து, நடுத்­தர மக்­களின் செல­வ­ழிப்பு திறன் உயர்ந்­துள்­ளது.மேலை­நா­க­ரி­கத்தை பின்­பற்றி, திரு­மண நிச்­ச­ய­தார்த்த விழாக்­களில், வைர மோதிரம் மாற்றிக் கொள்ளும் நடை­முறை பர­வ­லாகி வரு­கி­றது. இது போன்ற கார­ணங்­களால், வைரங்கள் மற்றும் வைர நகை துறை, சிறப்­பாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது.இந்­தி­யாவில், புதிய தலை­முறை பணக்­கா­ரர்கள் தர­மான, உயர்­ம­திப்­புள்ள பொருட்­களை பரி­ச­ளிப்­பதை கவு­ர­வ­மாக கரு­து­கின்­றனர்.இத்­த­கையோர், வைர நகை­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கின்­றனர். வைர நகை விற்­ப­னையில், இவர்­களின் பங்கு, குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு உள்­ளது. கடந்த, 2015 நில­வ­ரப்­படி, இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­களில், புதிய தலை­முறை பணக்­கா­ரர்­களின் எண்­ணிக்கை, 90 கோடி­யா­கவும், அவர்­களின் வருவாய், 8 லட்சம் கோடி டாலர் எனவும் மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இந்­தி­யாவில், நடுத்­தர வர்க்­கத்­தி­னரும், புதிய தலை­முறை பணக்­கா­ரர்­களும் பெருகி வரு­வதால், வைரங்கள் மற்றும் வைர நகைகள் சந்தை வளர்ச்சி சிறப்­பாக இருக்கும் என, கணிக்­கப்­பட்டு உள்­ளது. இந்­தியா மற்றும் சீனாவில், புதிய தலை­முறை பணக்­கா­ரர்­களும், நடுத்­தர வர்க்­கத்­தி­னரும் அதி­க­ரித்து வரு­வது போன்­ற­வற்றால், வைரங்­க­ளுக்­கான தேவை, ஆண்­டுக்கு, சரா­ச­ரி­யாக, 2– 5 சத­வீதம் வளர்ச்சி காணும். இந்­தியா, வரும், 2020ல், மிகப்­பெ­ரிய வைரச் சந்தை உள்ள நாடு­களில், ஐரோப்பா, ஜப்பான் நாடு­களை பின்­னுக்கு தள்­ளி­விட்டு, மூன்­றா­வது இடத்­திற்கு முன்­னேறும். முத­லி­ரண்டு இடங்­களில், சீனா, அமெ­ரிக்கா ஆகி­யவை தொடர்ந்து நீடிக்கும்இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
சப்ளை குறை­கி­றதுசமீப கால­மாக, சர்­வ­தேச அளவில், கச்சா வைரங்கள் சப்ளை குறைந்­துள்­ளது. இதற்கு, தற்­போ­தைய சுரங்­கங்­களில், வைர வளம் குறைந்து விட்­டதும், புதிய சுரங்­கங்கள் செயல்­பாட்­டிற்கு வரு­வதில் ஏற்­பட்­டுள்ள தாம­தமும், முக்­கிய கார­ணங்­க­ளாக உள்­ளன. இந்­தி­யாவில், பந்தர் வைரச் சுரங்க பணிகள் துவங்­கு­வது தாம­த­மாகி வரு­கி­றது. அதே சமயம், அங்­கோ­லாவின் புதிய, ‘லாக்ஸ்’ சுரங்­கங்கள் வாயி­லான வைரங்கள் வரத்து அதி­க­ரித்து உள்­ளது. இவற்றின் அடிப்­ப­டையில், 2030 வரை, கச்சா வைரங்கள் சப்ளை, ஆண்­டுக்கு, சரா­ச­ரி­யாக, 1 – 2 சத­வீதம் குறையும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)