மதுரை நெசவு சுற்றுலா : கோ - ஆப்டெக்ஸ் ஏற்பாடுமதுரை நெசவு சுற்றுலா : கோ - ஆப்டெக்ஸ் ஏற்பாடு ... உற்பத்தி - ஏற்றுமதியில் முதலிடம் பிடிக்க தமிழக ஜவுளி துறைக்கு தனி கொள்கை:இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கோரிக்கை உற்பத்தி - ஏற்றுமதியில் முதலிடம் பிடிக்க தமிழக ஜவுளி துறைக்கு தனி ... ...
வர்த்தகம் » ஜவுளி
பன்­முக ஜவுளி துறையில் 11 லட்சம் வேலை­வாய்ப்­புகள் உரு­வாகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2016
05:00

மும்பை:பன்­முக பயன்­பாட்­டிற்­கான ஜவு­ளி­க­ளுக்கு, சிறப்பு ஊக்­கத்­திட்டம் அறி­விக்­கப்­பட்­டதன் மூலம், அத்­து­றையில், 11 லட்சம் வேலை­வாய்ப்­புகள் உரு­வாகும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.
இது குறித்து, பருத்தி ஜவுளிகள் ஏற்­று­மதி மேம்­பாட்டு குழு தலைவர், உஜ்வல் லஹோத்தி கூறி­ய­தா­வது:மத்­திய அரசு, ஏற்­க­னவே, ஜவுளித் துறையின் மேம்­பாட்­டிற்கு, 6,000 கோடி ரூபாய் மதிப்­பி­லான, சிறப்பு ஊக்கச் சலு­கை­களை அறி­வித்­துள்­ளது. தற்­போது, பன்­முக ஜவு­ளிகள் துறைக்கும், சிறப்பு ஊக்கச் சலு­கைகள் அளிக்க, மத்­திய அமைச்­ச­ரவைக் குழு ஒப்­புதல் அளித்­துள்­ளது. இதன் மூலம், இத்­து­றையில், அடுத்த மூன்று ஆண்­டு­களில், நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும், 11 லட்சம் பேர் வேலை­வாய்ப்பு பெறுவர்.
பன்­முக ஜவுளி பிரிவில், படுக்கை விரிப்பு, திரைச் சீலை, மேசை விரிப்பு, துண்டு, தார்­பாலின், பைகள் உள்­ளிட்­டவை அடங்­கி­யுள்­ளன. இப்­பி­ரிவு, கிரா­மப்­பு­றங்­களைச் சேர்ந்த, ஏரா­ள­மான பெண்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு அளித்து வரு­கி­றது. அதை, மேலும் அதி­க­ரிக்கும் விதத்தில், மத்­திய அரசு சிறப்பு சலுகை திட்­டத்தை விரி­வு­ப­டுத்தி உள்­ளது. இதன்­படி, ஜவுளித் துறையில், ஆடைகள் பிரி­விற்கு அளிக்­கப்­பட்­டது போல், டி.யு.எப்.எஸ்., உள்­ளிட்ட திட்­டங்­களில், கூடு­த­லாக, 10 சத­வீத மானியம் பன்­முக ஜவுளித் துறைக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது.
இத்­துறை தொழி­லா­ளர்­களின் காலாண்­டிற்­கான, ‘ஓவர் டைம்’ வரம்பு, 100 மணி நேர­மாக உயர்த்­தப்­பட்டு உள்­ளது. அத்­துடன், 15 ஆயிரம் ரூபாய்க்கு குறை­வாக மாத ஊதியம் பெறுவோர், விரும்­பினால், தொழி­லாளர் வருங்­கால வைப்பு நிதியில் சேரலாம் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. இந்த வகையில், மத்­திய அரசின் சலு­கையால், பன்முக ஜவுளித் துறையில் உள்ள நிறுவ­னங்­களும், தொழி­லா­ளர்களும் பயன் பெறுவர்; வேலை­வாய்ப்­பு­களும் அதிகரிக்கும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
திருப்பூர்:உக்ரைன் -– ரஷ்யா போர் எதிரொலியாக, போலந்து வர்த்தகர்கள் ஆடை தயாரிப்பு ஆர்டர்களை ரத்து செய்து ... மேலும்
business news
திருப்பூர்:திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பு நிதியாண்டில், 32 ஆயிரம் கோடி ரூபாயை ... மேலும்
business news
திருப்பூர் : நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 71 ஆயிரத்து, 601 கோடி ரூபாயை ... மேலும்
business news
மும்பை : முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ ஜவுளித் துறையை சேர்ந்த ‘திவால்’ நடவடிக்கைக்கு ... மேலும்
business news
திருப்பூர்:‘‘ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற வர்த்தக இலக்கை, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை விரைவில் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)