பதிவு செய்த நாள்
17 டிச2016
01:24
புதுடில்லி:மாருதி சுசூகி, ‘இக்னிஸ்’ மாடல் காரை, அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. உள்நாட்டில், கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில், மாருதி சுசூகி இந்தியா முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், ‘இக்னிஸ்’ எனும், பிரீமியம் ஹேட்ச்பேக் காரை, அடுத்த மாதம், அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை பிரிவு செயல் இயக்குனர், கல்சி கூறியதாவது:எங்கள் நிறுவனத்தில், புதிய மாடல் காரான, ‘இக்னிஸ்’ வரும் ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார், வசதி படைத்தவர்கள் விரும்பும் வகையில், சொகுசாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என, இரு வகை கார்களும் உள்ளன.
‘ஆட்டோமேடிக் கியர்ஷிப்ட்’ வசதி கொண்டவை இந்த கார்கள். இக்னிஸ் கார், மாருதியின், ‘நெக்ஸா’ ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. தற்போது, இந்தியாவில், 115 நகரங்களில், 195 நெக்ஸா ஷோரூம்கள் உள்ளன. இந்த ஷோரூம்களின் எண்ணிக்கை, இந்தாண்டு இறுதிக்குள், 150 நகரங்களில், 250 ஆக உயர்த்தப்படும். இக்னிஸ் கார், குர்கானில் உள்ள மாருதி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|