ஐ.பி.ஏ., அமைப்பு மதிப்­பீடு:நாட்டின் பெயின்ட் சந்தை மதிப்பு ரூ.70,000 கோடி­யாக உயரும்ஐ.பி.ஏ., அமைப்பு மதிப்­பீடு:நாட்டின் பெயின்ட் சந்தை மதிப்பு ரூ.70,000 கோடி­யாக ... ... ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி - மீண்டும் ரூ.68-ஐ தாண்டியது ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி - மீண்டும் ரூ.68-ஐ தாண்டியது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உங்கள் நிதி காலண்டர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
01:27

வள­மான வாழ்க்­கைக்கு திட்­ட­மிடல் அவ­சியம். இது­வரை திட்­ட­மி­டலில் கவனம் செலுத்­தா­விட்டால், புத்­தாண்டை அதற்­கான வாய்ப்­பாக பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம். புத்­தாண்டின் துவக்­கத்தில் இந்த ஆண்­டுக்­கான இலக்­குகள் மற்றும் நிதி செயல்­பா­டு­களை தீர்­மா­னித்து திட்­ட­மிட நிதி காலண்டர் முறையை பின்­பற்­றலாம். அதா­வது, மாதத்­தோறும் மேற்­கொள்ள வேண்­டிய நிதி செயல்­களை தீர்­மா­னித்துக் கொள்­வது:
முதல் காலாண்டு
ஜன­வரி: ஆண்­டுக்­கான நிதி இலக்­கு­களை தீர்­மா­னிக்­கவும். உத்­தே­சித்­துள்ள முத­லீ­டுகள், நிலை­யான செல­வுகள் மற்றும் பெரிய செல­வு­களை பட்­டி­ய­லி­டவும். காப்­பீடு பிரீ­மி­யம்­க­ளுக்­கான நினை­வூட்­டலை குறித்து வைக்­கவும். பில்­களை செலுத்­து­வ­தற்­கான தேதி­களை குறித்து வைக்­கவும். பிப்­ர­வரி: பட்ஜெட் மாற்­றங்கள் மற்றும் சலு­கை­களை கவ­னித்து, அதற்­கேற்ப திட்­ட­மி­டவும். பணி­யி­டத்தில் திரும்பி கோரக்­கூ­டிய தொகைக்­காக மறக்­காமல் விண்­ணப்­பிக்­கவும். மார்ச்: பிள்­ளைகள் பள்ளி கட்­ட­ணத்­திற்­கான தொகை, கையில் இருப்­பதை உறுதி செய்­யவும். வரிச்­ச­லு­கைக்­கான திட்­ட­மி­டலில் வீண் பதற்றம் வேண்டாம்.
2ம் காலாண்டு
ஏப்ரல்: வரிச்­ச­லுகை சார்ந்த முத­லீ­டு­களை மேற்­கொள்ள நிதி இலக்­குகள் மற்றும் ரிஸ்க் தன்­மையை பரி­சீ­லிக்க வேண்டும். முத­லீட்­டிற்­கான தொகை சம்­ப­ளத்தில் இருந்து செல்லும் வகையில் இ.சி.எஸ்., கொடுக்­கவும். மே மாதம், விடு­முறை பயணம் செல்ல விரும்­பினால் அதற்­காக திட்­ட­மி­டவும்.மே: போனஸ் அல்­லது ஊதிய உயர்வு கிடைத்தால், செலவு செய்­வ­தற்கு முன் கடனை அடை­யுங்கள் அல்­லது முத­லீடு செய்­யுங்கள்.ஜூன்: காப்­பீட்டு திட்­டங்கள், முத­லீ­டுகள், சேமிப்பு கணக்கு தொடர்­பான காகித பணி­களை ஆய்வு செய்து, புதுப்­பிக்க வேண்­டிய விஷ­யங்­களில் கவனம் செலுத்­தவும்.
3ம் காலாண்டு
ஜூலை: 2016 – 17ம் ஆண்­டுக்­கான வரு­மான வரி கணக்கை தாக்கல் செய்­வ­தற்­கான கடைசி தேதி, ஜூலை 31. கடைசி நேர நெரி­சலை தவிர்க்க, முதல் அல்­லது இரண்டு வாரத்­தி­லேயே கணக்கை தாக்கல் செய்­யவும். இல்லை எனில் ஆன்லைன் மூலமே கணக்கை தாக்கல் செய்­யலாம். இதற்­கான இணை­ய­த­ளங்­களும் உள்­ளன.ஆகஸ்ட்: சுதந்­திர தின விடு­மு­றையை பயன்­ப­டுத்திக் கொண்டு, உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்­ளவும். செப்­டம்பர்: இது பண்­டிகை காலத்தின் துவக்கம். அதற்­கேற்ப திட்­ட­மி­டவும். வாங்க வேண்­டிய பொருட்­களையும் பட்­டி­ய­லிட்டு அதற்­கேற்ப பட்ஜெட் போடவும்.
4ம் காலாண்டு
அக்­டோபர்: உங்கள் வீட்டை, பழுது பார்க்க அல்­லது வர்ணம் பூச திட்­ட­மிட்­டி­ருந்தால், இது சரி­யான தருணம். விழாக்­கால சலு­கை­களை பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம். தீபா­வளி பண்­டி­கையை முன்­னிட்டு, ஆடைகள் வாங்க வேண்­டி­யி­ருக்கும். பட்­ஜெட்டை மனதில் கொள்­ளவும். டிசம்­பரில் விடு­முறை பயணம் செல்­வ­தாக இருந்தால், அதற்­கேற்ப திட்­ட­மி­டவும்.நவம்பர்: உங்­க­ளுக்கும், உங்கள் நிதிக்கும் ஓய்வு அளிக்க வேண்­டிய மாத­மாக வைத்துக் கொள்­ளுங்கள்; குறை­வாக செலவு செய்­யுங்கள். டிசம்பர்: வரு­டாந்­திர ஆய்வை மேற்­கொண்டு உங்கள் நிதி செயல்­பா­டு­களை பரி­சீ­லனை செய்­யுங்கள். நிதி இலக்­கு­களை அடைந்­தி­ருக்­கிறோமா என கேட்டுக் கொள்­ளவும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)