குஜராத் முத­லீட்­டா­ளர்கள் மாநாட்டில் ஜவுளி துறையில் ரூ.8,835 கோடி முத­லீடுகுஜராத் முத­லீட்­டா­ளர்கள் மாநாட்டில் ஜவுளி துறையில் ரூ.8,835 கோடி முத­லீடு ... கிரெடிட் கார்டு கட்­ட­ணங்கள் கிரெடிட் கார்டு கட்­ட­ணங்கள் ...
சுற்­றுலா துறையை மேலும் முறைப்­ப­டுத்­தினால்ஐ.டி., துறையின் வளர்ச்­சியை விஞ்சும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2017
04:10

ஐத­ராபாத்:'' இந்­திய சுற்­றுலா துறையை மேலும் அமைப்பு சார்ந்­த­தாக மாற்றி, ரொக்­க­மற்ற பரி­வர்த்­தனை அதி­க­மானால், ஐ.டி., எனப்­படும் தகவல் தொழில்­நுட்ப துறையின் வளர்ச்­சியை விஞ்சும்,'' என, அமெ­ரிக்­காவின் இமோரி பல்­க­லையின் சந்­தைப்­ப­டுத்­துதல் பிரிவு பேரா­சி­ரியர் ஜகதீஷ் என். சேத் தெரி­வித்­துள்ளார்.
அவர், ஐத­ராபாத் பல்­க­லையில், 'சந்­தைப்­ப­டுத்­து­வதில் நிகழும் மாற்­றங்கள்' என்ற சர்­வ­தேச கருத்­த­ரங்கில், பங்­கேற்று பேசி­ய­தா­வது:இந்­தி­யாவில் ஏரா­ள­மான சுற்­றுலா தலங்கள் இருந்தும், வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணி­களின் எண்­ணிக்கை, ஆண்­டுக்கு, 80 லட்சம் என்ற அளவில் தான் உள்­ளது.இதை உயர்த்த, மத்­திய அர­சுடன், மாநில அர­சு­களும் பல்­வேறு ஊக்­கு­விப்பு திட்­டங்­களை செயல்­ப­டுத்த வேண்டும் ; அவை அமைத்த, சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்கள், பொறி­யியல் கல்­லுா­ரிகள் போன்­றவை, ஐ.டி., துறையின் வளர்ச்­சிக்கு, வலு­வான அடிப்­படை கட்­ட­மைப்பு ஏற்­ப­டுத்தி தந்­தன.
இந்­திய ஐ.டி.,சேவைகள் துறையில், துவக்­கத்தில் சிறிய நிறு­வ­னங்கள் தான் ஈடு­பட்­டன. திடீ­ரென்று, அவை ஆண்­டுக்கு, 40,000 – 50,000 பட்­ட­தா­ரி­களை பணி­ய­மர்த்தும் அள­விற்கு, வளர்ச்சி பெற்­றன.இந்த அடிச்­சு­வட்டை பின்­பற்றி, சுற்­றுலா துறையும் வளர்ச்சி காண ஏரா­ள­மான வாய்ப்­புகள் உள்­ளன.சுற்­றுலா துறையை, மேலும் அமைப்பு சார்ந்த துறை­யாக மாற்ற, தேவை­யான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்த வேண்டும். குறிப்­பாக, வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணி­களின் வச­திக்­காக, ரொக்கப் பரி­வர்த்­த­னையை குறைத்து, அனைத்து மட்­டங்­க­ளிலும், மின்­னணு பணப் பரி­மாற்ற வச­தியை ஏற்­ப­டுத்த வேண்டும்.
வெளி­நாட்டு பய­ணிகள், ஊர் திரும்பும் போது, கையி­லுள்ள ரொக்­கத்தை எப்­ப­டி­யா­வது செல­வ­ழித்து தீர வேண்­டிய இக்­கட்டை சந்­திக்­கின்­றனர். இந்த பிரச்­னைக்கு, மின்­னணு பரி­வர்த்­தனை தீர்­வ­ளிக்கும்.
சீனா, சிங்­கப்பூர் போன்ற நாடுகள், சுற்­று­லாவை மேம்­ப­டுத்த, அத்­துறை சார்ந்த சர்­வ­தேச கருத்­த­ரங்­குகள், நிகழ்ச்­சிகள் ஆகி­ய­வற்றை அடிக்­கடி நடத்­து­கின்­றன. இதை, இந்­தி­யாவும் பின்­பற்ற வேண்டும்.
ஐ.டி., துறையைப் போல, சுற்­றுலா துறையின் வளர்ச்­சிக்கு, அத்­துறை சார்ந்த தொழில்­மு­னை­வோர்கள் அதிக அளவில் உரு­வாக வேண்டும். சுற்­றுலா செயல்­பா­டுகள் அனைத்­தையும், கணி­னி­ம­ய­மாக்கி ஒருங்­கி­ணைக்க வேண்டும்.
ஐ.டி., சேவை­து­றையில், 20 ஆண்­டு­க­ளுக்கு முன் இருந்த வளர்ச்சி விகிதம், தற்­போது இல்லை. இந்­நி­லையில், அரசு உரிய நட­வ­டிக்கை எடுத்தால், சுற்­றுலா துறை, ஐ.டி., துறையை விட, வளர்ச்­சியில் விஞ்சும்.இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.
இந்­திய சுற்­றுலா சந்தை, தற்­போ­தைய, 12,000 கோடி டாலரில் இருந்து, 2020ல், 27,000 கோடி டால­ராக உயரும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது; இது, அரசு நட­வ­டிக்­கைகள் மூலம் 50,000 கோடி டால­ராக அதி­க­ரிக்க வாய்ப்பு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)