வீட்டு கடன் வட்டி குறைப்பின் பலன் எப்­படி இருக்கும்?வீட்டு கடன் வட்டி குறைப்பின் பலன் எப்­படி இருக்கும்? ... யு.பி.ஐ., செயலி மூலம் மியூச்­சுவல் பண்ட்! யு.பி.ஐ., செயலி மூலம் மியூச்­சுவல் பண்ட்! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எங்­கேயும் எப்­போதும் ஷாப்பிங்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
02:59

மக்கள் பொருட்­களை வாங்கும் விதம், வாங்­கு­வது தொடர்­பான, முடி­வெ­டுக்கும் விதம் மற்றும் வாங்­கு­வது தொடர்­பான பழக்க வழக்­கங்­களில் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் பெரும் புரட்­சியின் மத்­தியில், நாம் இருப்­ப­தாக சொல்­கிறார் சக் மார்டின். மொபைல் மூலம் வாங்கும் பழக்கம் ஏற்­ப­டுத்தி வரும் தாக்­கத்தை, ‘மொபைல் இன்­பு­ளுயன்ஸ்’ புத்­த­கத்தில் அவர் விவ­ரித்­தி­ருக்­கிறார்.
இந்த மொபைல் ஷாப்பிங் புரட்­சியில், மொபைல்போன் மூலம் பொருட்­களை வாங்கும் நபர், எல்­லா­வற்­றையும் தன் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருப்­ப­தா­கவும், அவர்கள் கைகளில் புதிய அதி­கா­ரத்தை பெற்­றி­ருப்­ப­தா­கவும் அவர் குறிப்பி­டு­கிறார். மொபைல்போன் என்­பது, முன் எப்­போதும் இல்லாத வகையில், பொருட்­களை வாங்கும் பழக்­கத்தை மாற்­றி­யி­ருக்­கி­றது.
மொபைல்போன் கையில் இருக்கும் போது நுகர்வோர் எப்­போ­துமே தொடர்பில் இருக்­கிறார், அதோடு தக­வல்­களை சேக­ரித்துக் கொண்டே இருக்­கிறார். மொபைல்போன் மூலம் வாங்­கு­ப­வர்கள், பொருட்­களை வாங்கும் போது பல கட்­டங்­களில் போனையும், டேப்­லெட்­டையும் பயன்­ப­டுத்­து­கின்­றனர். வாங்­கு­வ­தற்கு முன்னும் பின்னும் பயன்­ப­டுத்­து­கின்­றனர். இது நிறு­வ­னங்­க­ளுக்கு புதிய சவாலை அளிக்­கி­றது.
மொபைல் ஷாப்பிங் என்­பது மாறு­பட்­டது. முதலில் அது தொடர்ச்­சி­யா­னது. வழக்­க­மான ஷாப்பிங் போல அல்­லாமல், மொபைல் ஷாப்பிங் எப்­போது வேண்­டு­மா­னாலும் நிக­ழலாம். நுகர்வோர் கடையில் அல்­லது கம்ப்­யூட்டர் முன் இருக்க வேண்டும் என்ற அவ­சி­ய­மில்லை. டிவி பார்க்கும் போது, பஸ்சில் பய­ணிக்கும் போது, அவர்கள் பொருட்­களை வாங்­கு­வது பற்றி ஆய்வு செய்து கொண்­டி­ருக்­கலாம். எந்த நேரத்­திலும், எந்த பொரு­ளையும் வாங்­கலாம் என்­பது பொருட்­களை வாங்­கு­வ­தையும், அதன் பழக்க வழக்­கங்­க­ளையும் முற்­றி­லு­மாக மாற்­றி­யி­ருக்­கி­றது. விற்­பனை நிலை­யங்­களில் கூட, பாதிக்கு மேற்­பட்ட வாடிக்­கை­யா­ளர்கள் மொபைல்­போனில் தக­வல்­களை ஆய்வு செய்­கின்­றனர். இதனால், சில்­லரை விற்­பனை கடைகள் மட்டும் அல்ல, அனைத்து வகை பிராண்ட்கள் மற்றும் விற்­ப­னை­யா­ளர்கள் மீது தாக்கம் இருக்கும். இந்த தாக்கம், ஷாப்பிங் செயல்­முறை முழு­வதும் இருக்­கலாம். இதை மொபைல் சிற்­றலை என குறிப்­பி­டலாம்.
வழக்­க­மான விற்­பனை செயல்­மு­றைக்கு பதிலாக, இப்­போது மொபைல் ஷாப்பிங் வாழ்க்கை சுழற்சி எனும் முறை உரு­வாகி கொண்­டி­ருக்­கி­றது. இது வாங்­கு­ப­வரின் மன­நி­லையை பாதிக்கக் கூடிய, ஆறு நிலை­களை கொண்­ட­தாக இருக்­கி­றது. எனவே, வழக்­க­மான விற்­பனை முறைக்­கான சந்­தைப்­ப­டுத்து­தலும் இப்­போது பய­ன­ளிக்­காது. மொபைல் ஷாப்பிங் சுழற்­சியில், ஆறு முக்­கிய கட்­டங்கள் உள்­ளன. வாங்­கு­வ­தற்கு முந்­தைய நிலை, வாங்­கு­வ­தற்­கான பயணம், கடைக்கு வரு­வது, தேர்வு, வாங்­கு­வது மற்றும் வாங்­கிய பின் என, ஆறு முக்­கிய நிலைகள் உள்ளன. மொபைல் மூலம் பொருட்­களை வாங்கும் வாடிக்­கை­யா­ளரை புரிந்து கொள்­வதன் மூலமே, அவர்கள் வாங்கும் முடிவின் மீது தாக்கம் செலுத்த முடியும். அவர்­க­ளிடம் மொபைல் ஆற்றல் இருக்­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)