வரி செலுத்­தாமல் ஏய்க்கும் சொகுசு விடு­திகள் நட­வ­டிக்கை எடுக்க ஓட்டல் துறை கோரிக்கை - பார­பட்ச கொள்­கையால் பாதிப்புவரி செலுத்­தாமல் ஏய்க்கும் சொகுசு விடு­திகள் நட­வ­டிக்கை எடுக்க ஓட்டல் ... ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.05 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.05 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘பைபேக்’கில் ஐ.டி., நிறு­வ­னங்கள் ஆர்வம் காட்­டு­வது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2017
04:42

முன்­னணி, ஐ.டி., நிறு­வ­னங்கள், ‘பைபேக்’ திட்டம் மூலம், பங்­கு­களை திரும்ப வாங்கிக் கொள்ளும் வாய்ப்பை தீவி­ர­மாக பரி­சீலிக்கத் துவங்­கி­­இருக்கும் சூழல் பற்றி, ஒரு பார்வை.

முத­லீட்­டா­ளர்கள் மற்றும் வல்­லு­னர்கள் மத்­தியில், நிறு­வ­னங்­களின் பைபேக் திட்டம் தான், தீவி­ர­மாக விவா­திக்­கப்­படும் விஷ­ய­மாக இருக்­கி­றது. அதிலும் குறிப்­பாக, ஐ.டி., துறையில் ஆர்வம் உள்ள முத­லீட்­டா­ளர்கள், இந்த விவா­தத்தை உன்­னிப்­பாக கவ­னித்து வரு­கின்­றனர். டி.சி.எஸ்., உள்­ளிட்ட முன்­னணி நிறு­வ­னங்கள் பைபேக் திட்டம் மூலம், பங்­கு­களை திரும்ப பெறு­வது பற்றி தீவி­ர­மாக பரி­சீ­லித்து வரு­வதே, இதற்கு முக்­கிய காரணம். டி.சி.எஸ்., நிறு­வ­னத்தின் இயக்­குனர் குழு, இது தொடர்­பாக முடி­வெ­டுக்கும் என, அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில், இன்­போசிஸ் உள்­ளிட்ட மற்ற முன்­னணி நிறு­வ­னங்­களும் பங்­கு­களைத் திரும்ப பெறும் முடிவை அறி­விக்­கலாம் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இன்­போசிஸ் நிறு­வனம் இதை மறுத்­தி­ருந்­தாலும், அதன் முத­லீட்­டா­ளர்கள் சிலர், இது குறித்து வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.
பைபேக் ஏன்?நிறு­வ­னங்கள் தங்கள் பங்­கு­களை முத­லீட்­டா­ளர்­க­ளிடம் இருந்து திரும்ப வாங்­கிக் ­கொள்ளும் செயல்­பாடே, பைபேக் என, குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. பைபேக் மூலம், பங்­கு­களை நிறு­வ­னங்கள் வாங்­கிக்­கொள்வ­தற்கு பல­வித கார­ணங்கள் உள்­ளன. பங்­குகள் மீதான வரு­வாயை அதி­க­ரிப்­பது, மூல­தனம் மீதான பலன், நிக­ர­ம­திப்பு மீதான பலனை அதி­க­ரிப்­பது, நிறு­வன பங்­கு­களை நிலைப்­ப­டுத்­து­வது, கைய­கப்­படுத்தல் முயற்­சியை முறி­ய­டிப்­பது என, பல வித கார­ணங்­க­ளுக்­காக பைபேக் வாய்ப்பை நிறு­வ­னங்கள் நாடலாம். இவைத்­த­விர பொது­வாக நிறு­வ­னங்கள் கைவசம், ரொக்க இருப்பு அதி­க­மாக உள்ள நிலை­யிலும், பங்­கு­தா­ரர்­க­ளுக்­கான பலனை அதி­க­ரிக்க விரும்பும் சூழ­லிலும், நிறு­வ­னங்கள் இந்த முடிவை மேற்­கொள்­ளலாம்.
இந்­திய ஐ.டி., நிறு­வ­னங்கள் மத்­தியில் இப்­போது, பங்­கு­களை திரும்ப வாங்கும் வாய்ப்பு பர­ப­ரப்­பாக பேசப்­பட பிர­தான காரணம், அவற்றின் கைவசம் அதிக ரொக்கம் இருப்­பது தான். அதோடு இந்த நிறு­வ­னங்­களின் வளர்ச்சி விகி­தமும், ஒற்றை இலக்­க­மாக குறைந்­துள்­ளது. அண்மை கால­மா­கவே ஐ.டி., நிறு­வ­னங்கள், வளர்ச்சி நோக்கில் பல்­வேறு சவால்­களை சந்­தித்து வரு­கின்­றன. தானி­யங்­கி­ம­ய­மாக்கல் உள்­ளிட்­டவை தாக்கம் செலுத்தும் வகையில், அமெ­ரிக்க அதிபர் டிரம்பின் கொள்கை முடி­வுகள் புதிய நெருக்­க­டியை உண்­டாக்­கி­யுள்­ளன.
இந்த சூழ்­நி­லையில், கைவசம் ரொக்­கத்தை வைத்­துள்ள, ஐ.டி., நிறு­வ­னங்கள் ஓர­ளவு பங்­கு­களை திரும்ப வாங்கி கொள்ளும் முடிவின் மூலம், அவற்றின் பங்­கு­தா­ரர்­க­ளுக்கு பலன் அளிக்க வேண்டும் எனும் கருத்து முன்­வைக்­கப்­படு­கி­றது. இக்­க­ருத்­திற்கு முதலில் வளைந்து கொடுத்­தி­ருப்­பது, காக்­னிசண்ட் நிறு­வனம் தான். இந்­நி­று­வனம், 3.4 பில்­லியன் டாலர் அளவில் பங்­கு­களை திரும்பி வாங்கி கொள்ள இருப்­ப­தாக அறி­வித்­துள்­ளது.
என்ன பலன்?இதைத் ­தொ­டர்ந்து டி.சி.எஸ்., நிறு­வ­னமும் இது தொடர்­பான பரி­சீ­ல­னையில் ஈடு­பட்­டுள்­ளது. நிறு­வன இயக்­குனர் குழு, இது தொடர்­பாக முடிவு எடுக்க உள்­ளது. இது இன்­போசிஸ், விப்ரோ உள்­ளிட்ட மற்ற முன்­னணி ஐ.டி., நிறு­வ­னங்­க­ளையும் இதே போன்று முடி­வெ­டுக்கும் நெருக்­க­டிக்கு உள்­ளாக்­கலாம் என கரு­தப்­ப­டு­கி­றது. அதிக ரொக்கம் வைத்­துள்ள நிறு­வ­னங்கள், கைய­கப்­ப­டுத்தல் போன்­ற­வற்றில் ஈடு­பட்டு, வளர்ச்சி வாய்ப்­பு­களை பெருக்கி கொள்­ளாத நிலையில் பங்­கு­களை திரும்ப பெறு­வது சரி­யாக இருக்கும் என, வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது. இன்­போசிஸ், எச்.சி.எல்., மற்றும் டெக் மகிந்­திரா உள்­ளிட்ட நிறு­வ­னங்கள் கடந்த, 2 ஆண்­டு­களில் மொத்தம், 11 நிறு­வ­னங்­களை மட்­டுமே கையக்­கப்­ப­டுத்­தி­யுள்­ளன.
இந்த சூழ்­நி­லையில் பங்­கு­களை திரும்ப வாங்­கு­வது, முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு பலன் அளிக்கும் என, வாதி­டப்­ப­டு­கி­றது. மேலும், ஈவுத்­தொ­கை­யாக முத­லீட்­டா­ளர்­களுக்கு பலன் அளிப்­ப­தை­விட, இந்த முறை மிகவும் ஏற்­றது என, கரு­தப்­ப­டு­கி­றது. ஈவுத்­தொகை வழங்கும் போது, அவை வரி விதிப்­புக்கு உள்­ளா­கின்­றன. எனவே, பங்­கு­களை வாங்­கு­வதன் மூலம் பலன் அளிக்க முடியும். மேலும், இவ்­வாறு செய்­வதன் மூலம் நிறு­வ­னங்கள் தங்கள் மீதான நம்­பிக்­கையை வலுப்­ப­டுத்­திக்­கொள்ளும். ஐ.டி., நிறு­வன பங்­குகள் விலை உயர்ந்­தி­ருப்­பது இதற்­கான அடை­யாளம். எனினும் ஒரு தரப்­பினர் நிறு­வ­னங்கள் பங்­கு­களை திரும்ப பெறு­வதை விட, கையில் இருக்கும் ரொக்­கத்தை சிறந்த முறையில் பயன்­ப­டுத்­திக் ­கொண்டு வளர்ச்­சியில் கவனம் செலுத்தி முத­லீட்­டா­ளர் ­க­ளுக்கு நீண்ட கால பலனை அளிக்க வேண்டும் என்றும் கூறு­கின்­றனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)