பதிவு செய்த நாள்
25 பிப்2017
04:33
புதுடில்லி : ஜக்ரான் குழுமத்தைச் சேர்ந்த, மியூசிக் பிராட்கேஸ்ட் நிறுவனம், ‘ரேடியோ சிட்டி’ பண்பலை வரிசை ஒலிபரப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம், மூலதன சந்தையில், புதிய பங்குகளை வெளியிட்டு, 400 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது. இப்பங்கு வெளியீடு, மார்ச், 6ல் துவங்குகிறது. மொத்தம், 26.59 லட்சம் பங்குகள் வெளியிடப்பட உள்ளன. பங்கு வெளியீடு, மார்ச், 8ல் முடிவடைகிறது. பங்கு வெளியீட்டில் திரட்டும் தொகை மூலம், ஏற்கனவே வெளியிட்ட, பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களை திரும்பப் பெற, மியூசிக் பிராட்கேஸ்ட் திட்டமிட்டு உள்ளது. இந்நிறுவனம், நாடு முழுவதும், 37 நகரங்களில், ரேடியோ சிட்டி பண்பலை வரிசை ஒலிபரப்பை மேற்கொண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், இந்நிறுவனம், 138.21 கோடி ரூபாய் வருவாயில், 29.76 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டிஉள்ளது. பத்திரிகை, தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், ஜக்ரான் குழுமம் ஈடுபட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|