ஸ்டேட் வங்கியுடன் 5 வங்கிகள் இணைப்புஸ்டேட் வங்கியுடன் 5 வங்கிகள் இணைப்பு ... தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் மார்ச் 3 வரை வாங்­கலாம் தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் மார்ச் 3 வரை வாங்­கலாம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சின்ன சின்ன நிதி பாடங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2017
00:00

பள்­ளிகள் கணிதம், அறி­வியல் பாடங்­களை கற்­றுத்­த­ரு­வது போலவே, பணத்தை எப்­படி சிறந்த முறையில் நிர்­வ­கிப்­பது என, கற்­றுத்­தர வேண்டும் என்று கூறு­கிறார், தனி­நபர் நிதி எழுத்­தா­ள­ரான கேரி செய்கல். அவர், நிதி வாழ்க்­கையை சிறந்த முறையில் நிர்­வ­கிக்க தேவை­யான, 99 அடிப்­படை வழி­களை முன்­வைக்­கிறார். பள்­ளி­களில் கற்­றுத்­த­ராத விஷ­யங்கள் எனும் பொருள் தரும் வகையில், ‘ஒய் டிடிண்ட் தே டீச் மீ திஸ் இன் ஸ்கூல்’ புத்­த­கத்தில் இந்த வழி­களை விவ­ரிக்­கிறார். அவற்றில் சில:
முதல் விஷயம், நிதி நோக்கில் சரி­யான நபரை திரு­மணம் செய்து கொள்ள வேண்டும். இதன் பொருள், நிதி விஷ­யங்­களில் மேதையை தேட வேண்டும் என்­றில்லை. நல்ல நிதி பழக்­கங்கள் உள்ள ஒரு­வரை திரு­மணம் செய்து கொள்ள வேண்டும் என்­ப­தாகும். திரு­ம­ணத்­திற்கு முன், பலரும் அதி­கப்­ப­டி­யாக செலவு செய்­தேனும், வாழ்க்கைத் துணை­யாக வர இருப்­ப­வரை கவர முற்­ப­டு­கின்­றனர். ஆனால், திரு­ம­ணத்­திற்கு பின், இப்­படி செலவு செய்­வது சாத்­தியம் இல்­லாமல் போகலாம்.
இரு­வரும் பணக் கொள்கை பற்றி பேசுங்கள். நீங்கள் சேமிப்­ப­வரா... செலவு பழக்கம் கொண்­ட­வரா... கடன் பற்றி உங்கள் கருத்து என்ன? என்­றெல்லாம் கேட்டு தெரிந்து கொள்­ளுங்கள். நல்ல நிதிப்­ப­ழக்கம் கொண்­ட­வரை மணந்து கொண்ட பின்னர், பரஸ்­பரம் பணக் கொள்­கையை கடை­பி­டிப்­பதை உறுதி செய்­யுங்கள். நிதி விஷ­யங்கள் தொடர்­பாக, திறந்த மன­துடன் விவா­தி­யுங்கள். இந்த விவாதம் தொடர்ச்­சி­யா­ன­தாக இருக்க வேண்டும்.
பிள்­ளை­களை வளர்ப்­பது செலவு மிக்­கது என்­பதை அறிந்­தி­ருங்கள். அதற்­கேற்ப திட்­ட­மிட்டு கொள்­வது நல்­லது. குழந்­தைகள் இருக்கும் போது, நீங்கள் சுய­ந­ல­மாக நடந்து கொள்ள முடி­யாது. அவர்­க­ளுக்­கான நீண்­ட­கால நோக்கில் செய்ய வேண்­டிய கட­மை­களை மனதில் கொள்ள வேண்டும்.எல்­லா­ருக்­குமே எல்­லாமே இப்­போதே தேவைப்­ப­டு­கி­றது. ஆனால், வரு­மா­னத்­திற்குள் செலவு செய்ய பழக வேண்டும். அப்­போது தான், சேமிக்­கவும், முத­லீடு செய்­யவும் பணம் இருக்கும். எனவே, எந்த ஒரு பொரு­ளையும் அதை, எப்­போது உங்­களால் வாங்க முடி­யுமோ அது­வரை காத்­தி­ருக்­கவும்.
உங்­களால் வாங்க முடி­யாத பொருட்­களை வாங்கும் பழக்கம் இருந்தால், செல­வுகள் அதி­க­ரித்து நிதி பாது­காப்பு பாதிக்­கப்­படும். வர­வுக்குள் செலவு செய்து வாழ்­வது என்­பது மோச­மாக வாழ்­வ­தாக அர்த்தம் இல்லை. அது புத்­தி­சா­லித்­த­ன­மாக வாழ்­வ­தாகும்.உங்­க­ளிடம் இருக்கும் பொருட்­களை முறையாக பரா­ம­ரிப்­பதில் கவனம் செலுத்­துங்கள். இவ்­வாறு கவனம் செலுத்தும் போது, உங்­க­ளிடம் உள்ள பொருட்கள் நீண்­ட­காலம் உழைக்கக் கூடி­ய­தாக இருக்கும். உங்­க­ளு­டைய நட்பு வட்­டத்தை பெருக்கி கொள்­ளுங்கள்.
நண்­பர்­க­ளிடம் இருந்து நல்­ல­வி­த­மான நிதி ஆலோ­ச­னைகள் கிடைக்­கலாம். உங்கள் வேலையில் இருந்து, உங்­க­ளுக்கு அதிகம் கிடைக்க வாய்ப்­புள்­ளதை புரிந்து கொள்­ளுங்கள். அது அனு­ப­வ­மா­கவும், கற்­ற­லா­கவும் இருக்­கலாம். எனவே, நிறு­வனம் உங்­களை பயன்­ப­டுத்­திக்­கொள்­கி­றது என, நினைக்­காமல் ஆர்­வத்­துடன் பணி­யாற்­றுங்கள்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)