பதிவு செய்த நாள்
23 மார்2017
06:25
நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த, ஆப்பிள் நிறுவனம், அதிநவீன வசதிகள் கொண்ட, ‘ஐ போன், ஐ பேடு’ உள்ளிட்ட சாதனங்களின் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அதன் இரண்டு, ‘ஐ பேடு’ சாதனங்கள் விலையை, அதிரடியாக குறைத்து உள்ளது.இதன்படி, ‘ஐ பேடு ஏர் ௨’ மாடல், மேம்படுத்தப்பட்டு, ‘ஐ பேடு’ என்ற பெயரில் வெளியிடப்பட்டு உள்ளது. இது, 9.7 அங்குல தொடுதிரை, 32 கிகாபைட் நினைவகம் உட்பட, பல நவீன வசதிகளை கொண்டுள்ளது. இதன் விலை, 399 டாலரில் இருந்து, 329 டாலராக குறைக்கப்பட்டு உள்ளது.மேலும், 7.9 அங்குல தொடுதிரை, 32 கிகாபைட் நினைவகம் உட்பட, மேம்படுத்தப்பட்ட பல அம்சங்களுடன், ‘ஐபேடு மினி 4’ வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விலை, 499 டாலரில் இருந்து, 399 டாலராக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.இந்நிறுவனம், ‘ரெட்’ வரிசையில், ‘ஐ போன் 7’ மற்றும் ‘7 பிளஸ்’ ஐ போன்களின் விற்பனையை, இம்மாத இறுதியில் துவக்க உள்ளது. இதற்கான முன்பதிவு, 24ல் துவங்குகிறது. இதில், ஒவ்வொரு போன் விற்பனையிலும், குறிப்பிட்ட தொகை, எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் திட்டங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என, ஆப்பிள் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|