மொபைல் போன் ஏற்றுமதியை ஊக்குவிக்க பாக்ஸ்கான் நிறுவனம் கோரிக்கைமொபைல் போன் ஏற்றுமதியை ஊக்குவிக்க பாக்ஸ்கான் நிறுவனம் கோரிக்கை ... ஆப்பிள் நிறுவனத்தின் கோரிக்கைகளை நிராகரித்தது வர்த்தக அமைச்சகம் ஆப்பிள் நிறுவனத்தின் கோரிக்கைகளை நிராகரித்தது வர்த்தக அமைச்சகம் ...
ஊடக துறை வளர்ச்­சிக்கு கைகொ­டுத்த விளம்­பர வரு­வாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2017
06:27

மும்பை: பண மதிப்பு நீக்க நடவடிக்கை பாதிப்பிலும், 2016ல், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை, 9.1 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது என, பிக்கி – கே.பி.எம்.ஜி., ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அதன் விபரம்:கடந்த ஆண்டு, பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில், பல்வேறு பிரிவுகளின் வளர்ச்சி குறைந்துள்ளது. இந்த நிலையிலும், அத்துறையின் வளர்ச்சி, 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு, விளம்பர வருவாய் கைகொடுத்துள்ளது.இந்தாண்டு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை, 13.1 சதவீதம் வளர்ச்சி காணும்; இது, அடுத்த நான்கு ஆண்டுகளில், 14 சதவீதமாக உயரும். விளம்பர வருவாய், ஆண்டுக்கு, சராசரியாக, 15.3 சதவீத வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இத்துறையின் வளர்ச்சிக்கு, கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் தேவைப்பாடு, பெருகி வரும் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு போன்றவையும் துணை புரியும்.கடந்த ஆண்டு, ‘டிவி’ துறை, 8.5 சதவீதம் என்ற அளவில், மதிப்பீட்டை விட, குறைவான வளர்ச்சியை கண்டுள்ளது.அச்சு ஊடக துறையின் வளர்ச்சி, 7 சதவீதமாக குறைந்துள்ளது. நடுத்தர மற்றும் சிறிய நகரங்களில், மாநில மொழி பத்திரிகைகளுக்கு வாசகர்கள் அதிகரித்து வருவதால், இந்தாண்டு, அச்சு ஊடகப் பிரிவு, 7.3 சதவீதம் வளர்ச்சி காணும்.கடந்த ஆண்டு, 28 சதவீத வளர்ச்சியை கண்ட, டிஜிட்டல் விளம்பர பிரிவு, ஆண்டுக்கு, சராசரியாக, 31 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2021ல், 29,450 கோடி டாலர் என்ற அளவை எட்டும். வானொலி மற்றும் திறந்தவெளி விளம்பர பிரிவுகளின் வளர்ச்சி, முறையே, 14.6 சதவீதம் மற்றும் 7 சதவீதம் என்ற அளவிற்கு இருந்தன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)