பதிவு செய்த நாள்
27 மார்2017
03:03
தனி நபர்கள் பட்ஜெட் போடாமலேயே, தங்கள் நிதி வாழ்க்கையை கட்டுக்குள் வைத்திருக்க எளிதான வழி இருக்கிறது என்கிறார், ஆராம் பயர்ஸ். இதற்கு வழிகாட்டும் வகையில், ‘யுவர் மேஜிக் நம்பர்’ புத்தகத்தை எழுதியிருக்கிறார்.பட்ஜெட் எல்லாம் எனக்கு சரிபட்டு வராது என, நீங்கள் நினைக்கலாம். பட்ஜெட் சிக்கலானது, கட்டுப்பாடு மிக்கது. அதற்கென நேரம் ஒதுக்க வேண்டும். அதை பின்பற்றி நடப்பது கடினமானது. ஆனால், இதைவிட எளிதான வழி இருக்கிறது. பட்ஜெட்டுக்கு பதில், உங்கள் மாய எண்ணை அறிந்து கொள்ளுங்கள். மாய எண்ணை தெரிந்து கொள்வது எளிதானது. அதற்கு முன் ஒரு விஷயம், நீங்கள் பணத்தை எப்படி செலவிட வேண்டும் என யாரும் சொல்ல மாட்டார்கள். உங்கள் பணத்தை எப்படி செலவிடுவது என்பது உங்கள் விருப்பம்.
இப்போது தினமும் ஒரு குறிப்பிட்ட தொகை இஷ்டம் போல செலவு செய்ய உங்களிடம் இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். இந்த பணத்தை எப்படி வேண்டுமானாலும் செலவிடலாம்.இந்த தொகை தான் உங்களுக்கான மாய எண். தினமும் விருப்பம் போல செலவு செய்ய உங்களிடம் உள்ள தொகை. இந்த தொகையை தினந்தோறும் செலவிடலாம். அல்லது அதை சேர்த்து வைத்து பின்னர் பயன்படுத்தலாம். ஆனால், உங்களுக்கான மாய எண் என்ன? இதை கண்டறிவது சுலபம் தான்.
உங்கள் ஆண்டு மொத்த வருமானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். (பிடித்தங்கள் போக வீட்டிற்கு கொண்டு வரும் தொகை). மாதந்தோறும் செய்யும் நிலையான செலவுகளை இதிலிருந்து கழித்து விடுங்கள். மீதி வரும் தொகையை, 365ல் வகுத்தால் கிடைக்கும் தொகையை உங்களுக்கான மாய எண். இந்த தொகையை தான், நீங்கள் இஷ்டம் போல செலவு செய்யலாம்.நிலையான செலவுகள் என்பது, மின் கட்டணம் போன்ற மாறக்கூடிய கட்டணங்களையும் கொண்டது. தவிர்க்க இயலாத செலவுகள் என்றும் புரிந்து கொள்ளலாம்.
அதாவது ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து மேற்கொள்ளும் செலவுகள் அனைத்தையும் இந்த பிரிவில் கொண்டு வர வேண்டும். சேமிப்பு மற்றும் கடன் தவணையும் இதில் அடங்கும். அவசர கால நிதிக்கான தொகையையும், இதில் சேர்த்துக் கொள்வது நல்லது.கடனை அடைக்க தேவைப்படும் தொகையையும் நிலையான செலவுகளாகவே கருத வேண்டும். அதுவும் ஒரு தவிர்க்க இயலாத செலவு தான்.இப்படி கணக்கிட்டு உங்கள் மாய எண் தொகையை கண்டறிந்த பின், அதை தினமும் உங்கள் விருப்பம் போல செலவிடலாம். மூன்று மாத செலவு கணக்கை திரும்பி பார்த்தால், உங்கள் நிலையான செலவுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
மாய எண் தொகையை ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டு தினந்தோறும் அதை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை குறித்து வைப்பது நல்லது. இதன் மூலம் செலவுகளை கண்காணிக்கலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|