வணிக முத்திரை உரிமம் பெற அன்னிய நிறுவனங்கள் அதிக ஆர்வம் வணிக முத்திரை உரிமம் பெற அன்னிய நிறுவனங்கள் அதிக ஆர்வம் ... கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிறுவனம் தாஜ் குழுமத்துடன் ஒப்பந்தம் கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிறுவனம் தாஜ் குழுமத்துடன் ஒப்பந்தம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வரு­மான வரி கணக்கு தாக்கல்: அவ­சி­யமும், பலன்­களும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2017
03:41

குறித்த காலத்தில் வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்­வது அவ­சி­ய­மா­னது மட்டும் அல்ல, பல்­வேறு பலன்­க­ளையும் அளிக்­கக்­கூ­டி­யது என்­பதை உணர வேண்டும் என, வல்­லு­னர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.
வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலம் மீண்டும் வந்­தி­ருக்­கி­றது. வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்­டி­ய­வர்கள், ஜூலை மாத இறு­திக்குள் தாக்கல் செய்ய வேண்டும். பலரும் இதை ஒரு சுமை­யாக கரு­தலாம். வரு­மான வரி விலக்கு வரம்­பிற்கு மேல், வரு­மானம் உள்­ள­வர்கள் கட்­டாயம் வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்­வது அவ­சியம் என்­ப­தையும், பலர் உண­ராமல் இருப்­ப­தாக வல்­லு­னர்கள் கூறு­கின்­றனர். டி.டீ.எஸ்., முறையில் வரி பிடித்தம் செய்­யப்­பட்­டாலும், வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
தாமதம் இல்­லாமல், குறித்த காலத்தில் வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்­வதால், பல்­வேறு அனு­கூ­லங்­களும் உள்­ளன. ஓராண்­டுக்கு மேல் வைத்­தி­ருக்கும் பங்­குகள் மூல­மான, பலன் போன்ற வரு­மா­னங்­களை கணக்கில் கொண்டு வர இது உத­வு­கி­றது.
எளி­மை­யான படிவம்வரு­மான வரித் துறை, வரு­மான வரி தாக்கல் செய்­வதை எளி­தாக்கும் வகையில் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது. ஒரு பக்க ஐ.டி.ஆர்., படிவம் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது. 50 லட்சம் ரூபாய் வரை வரு­மானம் கொண்­ட­வர்கள் மற்றும் ஒரு வீடு கொண்­ட­வர்­க­ளுக்கு இது பொருந்தும். இதில் இருந்த சொத்­துகள் மற்றும் கடன் பொறுப்­புகள் பகுதி விலக்­கப்­பட்­டுள்­ளது.ஐ.டி.ஆர்., – 2, ஐ.டி.ஆர்., – 2ஏ, ஐ.டி.ஆர்., – 3 ஆகிய படி­வங்கள் ஒன்­றி­ணைக்­கப்­பட்டு ஐ.டி.ஆர்., 2 படி­வ­மாக அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது. மற்ற படி­வங்கள் ஐ.டி.ஆர்., – 3 மற்றும் ஐ.டி.ஆர்., – 4 என, பெய­ரிப்­பட்­டுள்­ளன.
இந்த ஆண்டு முதல் ஆதார் எண்ணை சமர்ப்­பிப்­பது கட்­டாயம் ஆக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், ஆதார் எண்­ணுடன், பான் எண்ணை இணைக்­கவும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இதற்­கான வழி­மு­றை­களும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. பண மதிப்பு நீக்க காலத்தில், டிபாசிட் செய்த தொகை, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அதை குறிப்­பிட வேண்டும்.
அடிப்­படை வரம்புவரு­மான வரிச் சட்­டத்­தின்­படி அடிப்­படை வரம்­பிற்கு மேல் வரு­மானம் ஈட்­டு­ப­வர்கள் அனை­வரும் வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். நஷ்­டத்தை கொண்டு செல்ல விரும்­பு­கி­ற­வர்கள் அல்­லது பிடித்தம் செய்­யப்­பட்ட வரியை திரும்ப பெற விரும்­பு­கி­ற­வர்கள், நீண்ட கால ஆதாய பலன் பெற்­ற­வர்கள் மற்றும் அறக்­கட்­டளை போன்­றவை கீழ் உள்ள சொத்து மூலம் வரு­மானம் பெற்­ற­வர்கள் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இது அவ­சியம் என்­ப­தோடு, பல­வித பலன்­க­ளையும் அளிக்­கக்­கூ­டி­யது. வீட்டுக் கடன், கல்வி அல்­லது வாகனக் கட­னுக்கு விண்­ணப்­பிக்கும் போது, வரு­மான வரித் தாக்கல் விபரம் முன்­னு­ரி­மையை பெற்­றுத்­தரும். விசா பெறவும் இது அவ­சியம். வரு­மான வரி தாக்கல் செய்­யா­விட்டால் வங்­கிகள் கிரெடிட் கார்டு வழங்க தயங்­கலாம்.
மேலும், இதன் மூலம் வரு­மான வரித் துறை­யிடம் உங்­க­ளுக்­கான ஆவ­ணப்­ப­திவை உண்­டாக்­கலாம். எல்­லா­வற்­றுக்கும் மேல், வரு­மான வரி தாக்கல் செய்­வதன் மூலம் தேசிய பொரு­ளா­தா­ரத்­திற்கும் நீங்கள் உத­வு­கி­றீர்கள். குறித்த காலத்தில் விப­ரங்­களை தாக்கல் செய்­வதன் மூலம், பின்னர் திருத்­தங்­களை செய்­வது சாத்­தியம். வரம்­பிற்குள் இருந்தால் பிடித்தம் செய்த வரியை திரும்ப பெறு­வதும் சாத்­தியம்.
அப­ரா­தமும் உண்டு குறித்த காலத்தில் வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்­யா­விட்டால், அதற்­காக அப­ராதம் விதிக்­கப்­ப­டலாம். 2017 பட்­ஜெட்டில், சரி­யான மதிப்­பீட்டு ஆண்டில் தாக்கல் செய்­யா­விட்டால் 5,000 ரூபாய் அப­ராதம் விதிக்க வழி செய்­யப்­பட்­டுள்­ளது. எனவே, குறித்தக் காலத்தில் வரு­மான வரி தாக்கல் செய்­வது மிகவும் அவ­சியம். தற்­போது, டிஜிட்டல் தொழிற்­நுட்­பத்தின் பய­னாக வரு­மான வரித் துறையால் பரி­வர்த்­த­னை­களை மேலும் சிறந்த முறையில் கண்­கா­ணிக்க முடி­கி­றது. பல்­வேறு வகை­யான வரு­மா­னங்­க­ளையும் தொடர்ந்து காண்­கா­ணிக்­கி­றது. ஆண்டு முழு­வதும் மேற்­கொள்ளப்­பட்ட பரி­வர்த்­த­னை­களையும் கண்­கா­ணித்து விப­ரங்­களை திரட்­டு­வது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது. இதனால், தவ­றி­ழைப்­ப­வர்­களை எளி­தாக கண்­ட­றி­யலாம். எனவே, முறை­யாக வரு­மான வரி தாக்கல் செய்­வது தேவை­யில்­லாத பிரச்­னை­களை தவிர்க்க உதவும்.
வரு­மான வரி தாக்கல் செய்ய வேண்­டி­ய­வர்கள்* அடிப்­படை வரம்­புக்கு அதி­க­மான வரு­மானம் உள்­ள­வர்கள்* ரீபண்ட் பெற விரும்­பு­கி­ற­வர்கள்* சம­பங்கு மூலம், நீண்ட கால ஆதாய பலன் பெற்­ற­வர்கள்* கடன் விண்­ணப்­பங்கள் செயல்­மு­றையில் சாதகம் பெற* விசா பெற விரும்­பு­கி­ற­வர்கள்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)