நிதி வாழ்க்­கையை சீர­மைக்கும் வழிநிதி வாழ்க்­கையை சீர­மைக்கும் வழி ... விரைவு, உட­னடி கடன்கள் உங்­க­ளுக்கு ஏற்­ற­வையா? விரைவு, உட­னடி கடன்கள் உங்­க­ளுக்கு ஏற்­ற­வையா? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தங்­க­மான முத­லீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2017
04:17

தங்­கத்தின் மதிப்பு அனை­வரும் அறிந்­ததே. தங்க நகை­களை அணிந்து மகி­ழலாம் என்­ப­தோடு, அவை முத­லீ­டா­கவும் விளங்­கு­கி­றது. தங்­கத்தில் முத­லீடு செய்­வது பண­வீக்­கத்­திற்கு எதி­ரான பாது­காப்­பா­கவும் அமை­வ­தாக கரு­தப்­ப­டு­கி­றது. தங்க நகை­களை வாங்கும் பழக்கம் பாரம்­ப­ரி­ய­மாக இருந்து வரும் நிலையில், தங்­கத்தில் முத­லீடு செய்யும் வழி­களும் அதி­க­ரித்­துள்­ளன. அவை பற்றி ஒரு கண்­ணோட்டம்:

ஆப­ரணம்நகை வடிவில் தங்­கத்தை வாங்­கு­வதே பாரம்­ப­ரிய வழக்­க­மாக இருக்­கி­றது. திரு­மணம் போன்ற சுப நிகழ்­வு­களின் போது, பண்­டிகை காலங்­களில் தங்க நகை வாங்கும் பழக்கம் பர­வ­லாக உள்­ளது. அட்­சய திரு­தியை திருநாள் அன்று, தங்கம் வாங்­கு­வது சிறந்­தது எனும் நம்­பிக்கை உள்­ளது. தங்க நகை முத­லீ­டா­க அமைந்­தாலும், முத­லீட்டு நோக்கில், தங்­கத்தை நகை வடிவில் வாங்­கு­வது தொடர்­பான மாற்று கருத்­துக்­களும் இருக்­கின்­றன. செய்­கூலி மற்றும் சேதாரம் அதன் பலனை பாதிப்­ப­தாக கரு­தப்­ப­டு­கி­றது.
தங்க நாணயம்தங்­கத்தை நாணயம் அல்­லது தங்க கட்­டி­யா­க வாங்­கலாம். நகைக் கடைகள் மற்றும் வங்­கி­களில் இவற்றை வாங்­கலாம். ஆனால், வங்­கி­க­ளிடம் இருந்து தங்க நாணயம் அல்­லது கட்­டி­களை வாங்கும் போது, அவற்றை அவை திரும்பி வாங்கிக் கொள்­வ­தில்லை என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும். மேலும், இவை சற்று அதி­க­மாக பிரீ­மியம் விலையில், தங்க நாண­யத்தை விற்­ப­தையும் மனதில் கொள்ள வேண்டும். இவற்றை பாது­காப்­பா­கவும் வைத்­தி­ருப்­பதும் அவ­சியம்.
இ – கோல்டுதங்­கத்தை இ–கோல்ட் வடி­விலும் வாங்­கலாம். பங்­குகள் போல மின்­னணு வடிவில் தங்­கத்தை வைத்­தி­ருக்கும் வசதி இது. இதற்கு டிமெட் கணக்கு அவ­சியம். மேலும், பியூச்சர்ஸ் எனப்­படும் முன்­பேர வர்த்­தக வடி­விலும் தங்கம் வாங்­கலாம். இவை தவிர, அரசு சார்பில் ஒவ்­வொரு கட்­ட­மாக வெளி­யி­டப்­படும் தங்க சேமிப்பு பத்­தி­ரங்­க­ளையும் வாங்­கலாம். பத்­திர முதிர்வு காலத்தில், அப்­போ­தைய தங்க விலைக்கு ஏற்ற மதிப்பை பெறலாம் என்­ப­தோடு, முத­லீடு காலத்­திற்கு வட்­டியும் உண்டு.
தங்க இ.டி.எப்.,கள்முத­லீடு நோக்கில் தங்கம் வாங்க விரும்­பினால் தங்க இ.டி.எப்.,களை நாடலாம். ‘கோல்ட் எக்ஸ்சேஞ் டிரேடட் பண்ட்ஸ்’ என, இவை குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. இவையும் ஒரு வகை­யான மியூச்­சுவல் பண்ட்கள் போன்­றவை தான். கிராம் அடிப்­ப­டையில் யூனிட்கள் அமையும். இவற்றை மின்­னணு வடிவில் வைத்­தி­ருக்­கலாம். சந்­தையில் பரி­வர்த்­தனை செய்­யலாம். பாது­காப்பு பிரச்னை கிடை­யாது. தங்க மியூச்­சுவல் பண்ட்­களும் உள்­ளன. இவை தங்க சுரங்க பணி தொடர்­பான நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­பவை.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)