பதிவு செய்த நாள்
27 ஏப்2017
00:44
புதுடில்லி : ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், ரிலையன்ஸ் சூப்பர், பிரெஷ், ஹைப்பர் என்ற பெயர்களில், 708 நகரங்களில், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் என, 3,616 கடைகளை நடத்தி வருகிறது.
இந்நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 366 கோடி ரூபாயை வரிக்கு முந்தைய லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 221 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே காலாண்டுகளின் ஒப்பீட்டில், இந்நிறுவனத்தின் விற்றுமுதல், 83 சதவீதம் உயர்ந்து, 5,646 கோடி ரூபாயில் இருந்து, 10,332 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த முழு நிதியாண்டில், இந்நிறுவனத்தின் வருவாய், 60.2 சதவீதம் உயர்ந்து, 21,075 கோடி ரூபாயில் இருந்து, 33,765 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|