பதிவு செய்த நாள்
30 ஏப்2017
03:46
புதுடில்லி:டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 126.77 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 136.03 கோடி ரூபாயாக உயர்ந்து இருந்தது. இதே கால ஒப்பீட்டில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 1.56 சதவீதம் உயர்ந்து, 3,090.77 கோடி ரூபாயில் இருந்து, 3,139.22 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த முழு நிதியாண்டைப் பொறுத்தவரை, இந்நிறுவனத்தின் நிகர லாபம், 558.10 கோடி ரூபாய்; மொத்த வருவாய், 13,363.43 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.கடந்த காலாண்டில், டி.வி.எஸ்., 2.15 லட்சம் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 2.47 லட்சமாக இருந்தது. அதேசமயம், ஸ்கூட்டர் வாகன விற்பனை, 1.98 லட்சத்தில் இருந்து, 2.23 லட்சமாக அதிகரித்துள்ளது.கடந்த முழு நிதியாண்டில், விற்பனையை பொறுத்தவரை மோட்டார் சைக்கிள், 10.77 லட்சம்; ஸ்கூட்டர், 8.70 லட்சம்; மூன்று சக்கர வாகனம், 69 ஆயிரம் என விற்பனை ஆகியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|