பதிவு செய்த நாள்
02 மே2017
08:07
புதுடில்லி : மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், கடந்த ஏப்ரலில், 1.51 லட்சம் கார்களை விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை, கடந்த ஏப்ரலில், 23.4 சதவீதம் அதிகரித்து, 1,44,492 ஆக உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 1,17,045 ஆக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், சிறிய வகை ஆல்டோ மற்றும் வேகன் ஆர் கார்கள் விற்பனை, 21.9 சதவீதம் அதிகரித்து, 38,897 ஆக உள்ளது. காம்பேக்ட் பிரிவைச் சேர்ந்த, ஸ்விப்ட், எஸ்டிலோ, டிசையர், பலேனோ மற்றும் இக்னிஸ் கார்கள் விற்பனை, 39.1 சதவீதம் ஏற்றம் கண்டு, 45,700லிருந்து, 63,584 ஆக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், சொகுசு வகையைச் சேர்ந்த, எர்டிகா, எஸ் – கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் விற்பனை, 28.6 சதவீதம் அதிகரித்து, 20,638 ஆக உள்ளது.அதே சமயம், வேன்ஸ், ஓம்னி மற்றும் இ – எகோ விற்பனை, 4 சதவீதம் குறைந்து, 14,520லிருந்து, 13,938 ஆக சரிவடைந்து உள்ளது. நிறுவனத்தின் ஏற்றுமதி, 29.4 சதவீதம் குறைந்து, 6,723 ஆக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|