பதிவு செய்த நாள்
23 மே2017
07:28
மும்பை : ஹிமாலயா டிரக் கம்பெனி, தனிநபர் மற்றும் ஆரோக்கிய பராமரிப்புக்காக, மூலிகை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறது. இந்நிறுவனம், ஆண்களுக்கான முகம் கழுவும் கிரீம் விற்பனையின் மூலம், அதிகளவில் வருவாய் ஈட்ட திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: இந்தியாவில், முகம் கழுவும் கிரீம் சந்தை மதிப்பு, 1,800 கோடி ரூபாயாக உள்ளது. அதில், ஆண்கள் பயன்படுத்தும் கிரீம்களின் பங்கு, 15 – 20 சதவீதம் என்றளவில் உள்ளது. இது, ஆண்டுதோறும், 10 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. ஒட்டுமொத்த முகம் கழுவும் கிரீம் சந்தையில், ஹிமாலயா, 24 சதவீத பங்குடன் முதலிடத்தில் உள்ளது. தற்போது, ஆண்கள் பலரும், முகம் கழுவும் கிரீமை பயன்படுத்தி வருகின்றனர். அதன் விற்பனையில், எங்கள் நிறுவனத்தின் சந்தை பங்கு, 8 – 10 சதவீதம் என்றளவில் உள்ளது. இதை, அடுத்த இரு ஆண்டுகளில், 20 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|