பதிவு செய்த நாள்
26 மே2017
23:50
புதுடில்லி : சர்வதேச அளவில் சிறந்து விளங்கும், நுகர்வோர் நிதி சேவை நிறுவனங்களின், ‘டாப் – 10’ பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த, எச்.டி.எப்.சி., நிறுவனம், ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.
எச்.டி.எப்.சி., நிறுவனம், நுகர்வோர் நிதி சேவைகள் துறையில், 1,600 கோடி டாலர் லாபம் மற்றும் 8,100 கோடி டாலர் விற்பனையுடன், கடந்த ஆண்டை போலவே, ‘போர்ப்ஸ் குளோபல் – 2017’ பட்டியலில், ஏழாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சர்வதேச அளவில், இந்தியாவிலிருந்து, இந்நிறுவனம் மட்டுமே, ‘டாப் – 10’ பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்நிறுவனம், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. கேப்பிட்டல் ஒன் பைனான்ஷியல், விசா ஆகிய நிறுவனங்கள், முறையே, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.நிறுவனங்களின் விற்பனை, லாபம், சொத்து, சந்தை மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|