பதிவு செய்த நாள்
21 ஜூன்2017
23:49
புதுடில்லி : மேக்னா நிறுவனம், இந்திய விளம்பர சந்தை குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: கடந்தாண்டு, இந்திய விளம்பர சந்தையின் வளர்ச்சி, 11.8 சதவீதமாக இருந்தது. இது, இந்தாண்டு, 13.5 சதவீதமாக உயரும் என, ஏற்கனவே மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த மாதம் அறிமுகமாகும், ஜி.எஸ்.டி.,யின் தாக்கத்தால், விளம்பர சந்தையின் வளர்ச்சி, 11.5 சதவீதம் என்ற அளவிற்கே இருக்கும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
இருந்த போதிலும், உலகின் மிகப்பெரிய விளம்பர சந்தை உள்ள, 10 நாடுகளில் ஒன்றாக, இந்தாண்டு, இந்தியா முன்னேறும். கடந்த ஆண்டு, இந்த இடத்தை, இத்தாலி பிடித்திருந்தது. இந்தாண்டு, இந்தியாவின் விளம்பர செலவினம், 56,400 கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு, இந்திய விளம்பர சந்தையின் வளர்ச்சி, 12.5 சதவீதமாகவும், 2019ல், 14 சதவீதமாகவும் இருக்கும். இந்த வளர்ச்சிக்கு, உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, பொதுத் தேர்தல் உள்ளிட்டவை துணை புரியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|