எச்.டி.எப்.சி., தலைவர் தீபக் பரேக் நம்பிக்கை-  ‘வீடு, நிலம் விற்பனை முறைகேடுகளை புதிய ரியல் எஸ்டேட் சட்டம் தடுக்கும்’எச்.டி.எப்.சி., தலைவர் தீபக் பரேக் நம்பிக்கை- ‘வீடு, நிலம் விற்பனை ... ... சிறு­தொ­ழில்­க­ளுக்கு ரொக்­க­மில்லா பரி­வர்த்­தனை சிறு­தொ­ழில்­க­ளுக்கு ரொக்­க­மில்லா பரி­வர்த்­தனை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமா­டிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2017
07:15

கச்சா எண்ணெய்
சர்­வ­தேச சந்­தை­யில், கச்சா எண்­ணெய் விலை, கடந்த சில வாரங்­க­ளாக தொடர் சரி­வை சந்­தித்து வரு­கிறது. ஒரு பேரல், 52 டால­ராக இருந்­தது. தற்­போது, 20 சத­வீ­தம் விலை குறைந்து, 42.14 டால­ராக கடந்த வெள்­ளி­யன்று வியா­பா­ரம் முடி­வுற்­றது. இத்­தொ­டர் சரிவு கடந்த, 2016ம் ஆண்­டுக்கு பின் தற்­போது நடந்­துள்­ளது.

கடந்த வாரம் குறிப்­பிட்­டது போல, 42 டாலர் ஒரு பேரல் என்ற விலை நல்ல சப்­போர்ட் ஆகும். இந்த வாரம் சந்­தை­யில், கச்சா எண்­ணெய் விலை, 42 டால­ருக்கு கீழே குறை­யு­மெ­னில் இச்­ச­ரிவு தொடர்ந்து, அடுத்த சப்­போர்ட் ஆன, 39.25 டாலர் என்ற நிலையை அடை­யும் என்­ப­தில் மாற்­ற­மில்லை. ஒபெக் கூட்­ட­மைப்பு நாடு­கள், அதன் தின­சரி உற்­பத்­தியை குறைத்து, கச்சா எண்­ணெய் விலையை உயர்த்த கடந்த மாதம் நடை­பெற்ற கூட்­டத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. ஆனால், நடை­மு­றை­யில் சில நாடு­கள் தங்­களின் உற்­பத்­தியை குறைக்க முன்­வ­ர­வில்லை. உறுப்பு நாடான, லிபியா தன் உற்­பத்­தியை பன்­ம­டங்கு அதி­க­ரித்­தது. அதா­வது, கடந்த நான்கு ஆண்­டு­களை விட உற்­பத்தி மற்­றும் சேமிப்பை உயர்த்­தி­யது.

இது சந்­தை­யில் கச்சா எண்­ணெய் விலைக்கு பாத­க­மாக அமைந்­தது. மற்­று­மொரு நாடான, நைஜீ­ரி­யா­வி­லும் உற்­பத்தி அதி­க­ரித்­துள்­ளது. மேலும், அமெ­ரிக்க உற்­பத்­தி­யும் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. கடந்த புதன்­கி­ழமை வெளி வந்த புள்ளி விவ­ரப்­படி, தின­சரி கச்சா எண்­ணெய் உற்­பத்தி, 20,000 பேரல்­கள் அதி­க­ரித்து, 9.31 மில்­லி­யன் பேரல்­க­ளா­னது. இருப்­பி­னும், அமெ­ரிக்க எண்­ணெய் இருப்பு அளவு, 2.45 மில்­லி­யன் பேரல்­கள் குறைந்து, 509.1 மில்­லி­யன் பேரல்­க­ளாக உள்­ளது. ஒபெக் கூட்­ட­மைப்­பில் இல்­லாத நாடான ரஷ்யா, அதி­க­ள­வி­லான உற்­பத்தி குறைப்­புக்கு பல­முறை எதிர்ப்பு தெரி­வித்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஜூலை) 2,750 2,685 2,815 2,852என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 42.00 39.25 44.70 46.50

தங்கம், வெள்ளி
தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­கள் கடந்த வாரம் சிறிது ஏற்­றத்­தில் முடி­வ­டைந்­தது. முந்­தைய இரு வாரங்­கள் விலை கடு­மை­யாக குறைந்­தது. அமெ­ரிக்­கா­வின் வட்டி விகி­தம் 0.25 சத­வீ­தம் உயர்த்­தப்­பட்­ட­தன் கார­ண­மாக, தங்­கத்­தின் மீதான முத­லீட்டு ஆர்­வம் குறைந்­தது மற்­றும் வியா­பா­ரி­கள் லாபம் எடுத்­தல் போன்­ற­வை­க­ளால் விலை குறைந்­தது. பின்­னர், தொடர் கச்சா எண்­ணெய் விலை சரி­வா­லும், மேலை நாடு­களின் பண­வீக்க விகி­தம் குறை­யும் என்ற எதிர்­பார்ப்­பா­லும், அடுத்து நடை­பெற உள்ள அமெ­ரிக்க நிதி கொள்­கை­யில் மாற்­றம் வரும் என்ற கணிப்­பா­லும் தங்­கம் மற்­றும் வெள்ளி விலை சிறி­த­ளவு உயர்ந்­தது.

தற்­போது, 10 ஆண்டு அமெ­ரிக்க கரு­வூல பத்­தி­ரத்­தின் வரு­மா­னம் குறைந்து, 2.15 சத­வீ­தம் ஆக உள்­ளது. இது கடந்த ஆண்டு நவம்­பர் மாதத்தை விட குறை­வா­கும். இத­னால் வரும் காலங்­களில் தங்­கத்­தின் மீதான ஆர்­வம் கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஆப­ரண சந்­தை­யில் சீனா­வும், இந்­தி­யா­வும் பெரும் பங்கு வகிக்­கின்றன. தற்­போ­தைய புதிய வரி­வி­திப்பு முறை­யான ஜி.எஸ்.டி., நம் உள்­நாட்­டில் தங்­கம் மற்­றும் வெள்ளி வர்த்­த­கத்தை எளி­மை­யாக்­கு­வ­தோடு இல்­லா­மல், இறக்­கு­ம­தி­யை­யும் அதி­க­ரிக்­கும் என்ற எதிர்­பார்ப்பு நில­வு­கிறது.

வாரம் ஒரு முறை, வியா­ழன் அன்று வெளி­வ­ரும் அமெ­ரிக்க பொரு­ளா­தார கார­ணி­க­ளான வேலை­யில்­லா­தவர்­க­ளுக்­கான ஊக்­கத் தொகை விப­ரத்­தில் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தன் விளை­வாக, அமெ­ரிக்க நாணய குறி­யீட்டு எண் டாலர் இண்­டெக்ஸ் குறைந்­தது. இதன் கார­ண­மாக, தங்­கம் மற்­றும் வெள்ளி விலை உயர்ந்து காணப்­பட்­டது.

தங்கம்
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஆகஸ்ட்) 28,510 28,350 28,950 29,290காம்எக்ஸ் (டாலர்) 1,250 1,238 1,267 1,280

வெள்ளி
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஜூலை) 38,050 37,600 38,800 39,160காம்எக்ஸ் (டாலர்) 16.15 15.70 17.05 17.50

செம்பு
செம்பு விலை கடந்த வாரம் அதி­க­ரித்து, வியா­பா­ரம் உயர்­வில் முடி­வ­டைந்­தது. உல­க­ள­வில் செம்பு உப­யோ­கம் அதி­கம் உள்ள நாடு­க­ளான அமெ­ரிக்கா மற்­றும் சீன சந்­தை­களில் அதன் தேவை அதி­க­ரிக்­கும் என்ற எதிர்­பார்ப்­பில் விலை உயர்ந்­தது.

அண்­மை­யில் வெளி­வந்த புள்ளி விப­ரப்­படி, சீனா­வின் செம்பு உப­யோ­கம், 2017ம் ஆண்டு, 7,20,000 டன்­க­ளாக இருக்­கும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், இந்­தோ­னே­சி­யாவை சேர்ந்த பிரி­போர்ட் என்ற சுரங்­கத்­தின் தொழி­லா­ளர்­கள் மேற்­கொண்ட வேலை நிறுத்­தம் கார­ண­மாக உற்­பத்தி பாதிப்­புக்­குள்­ளா­கி­யது. இது, உல­கின் இரண்­டா­வது மிகப்­பெ­ரிய சுரங்­க­மா­கும். வரும் நாட்­களில் செம்­பின் விலை அதி­க­ரித்து, வியா­பா­ரம் ஆகும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஜூன்) 369.50 365.00 377.50 384.00
-முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)