சிறு­தொ­ழில்­க­ளுக்கு ரொக்­க­மில்லா பரி­வர்த்­தனைசிறு­தொ­ழில்­க­ளுக்கு ரொக்­க­மில்லா பரி­வர்த்­தனை ... மலேஷியாவின் கியோடா நிறுவனம் இந்தியாவில் ஸ்டோர்களை அமைக்கிறது மலேஷியாவின் கியோடா நிறுவனம் இந்தியாவில் ஸ்டோர்களை அமைக்கிறது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பட்ஜெட் போடு­வது ஏன் முக்­கியம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2017
07:39

நிதி வெற்­றிக்­கான வழி­களை விவ­ரிக்கும் வகையில், ‘மோர் மணி ப்ளீஸ்’ எனும் புத்­த­கத்தை எழு­தி­யுள்ள ஸ்காட் கேம், பட்ஜெட் போடு­வதன் முக்­கி­யத்­து­வத்­தையும், அதற்­கான வழி­க­ளையும் விவ­ரிக்­கிறார்:

பட்ஜெட் எனும் வார்த்­தையை கேட்­ட­துமே, கால்­கு­லேட்டர், காகி­தங்கள், பார்­மு­லாக்கள் இவற்­றோடு மல்­லுக்­கட்ட வேண்­டி­யி­ருக்கும் என, திகைக்­கலாம். ஆனால், பட்ஜெட் போடு­வது என்­பது, நீங்கள் நினைத்து அஞ்­சு­வது போல, அத்­தனை சோத­னை­யா­னது அல்ல. நிச்­ச­ய­மாக பட்ஜெட் போடு­வது வலி மிகுந்­ததோ, அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடி­யதோ அல்ல.

நீண்ட கால நோக்கில், நிதி விஷ­யங்களை வெற்­றி­க­ர­மாக்க பட்ஜெட் மிகவும் அவ­சியம். இதற்கு, மாதம் சில மணி நேரம் போதும். பட்ஜெட் போடாமல் செலவு செய்­வது என்­பது, கண்ணைக் கட்டி, கார் ஓட்­டு­வ­தற்கு சமம். நீங்கள் எவ்­வ­ளவு சம்­பா­திக்­கி­றீர்கள்; எவ்­வ­ளவு செலவு செய்து, எவ்­வ­ளவு சேமிக்­கி­றீர்கள் போன்­றவை குறித்த சித்­தி­ரத்தை பட்ஜெட் அளிக்­கி­றது.

உங்கள் கையில் அதிக பணம் இருக்க வேண்டும் எனில், பட்ஜெட் அவ­சியம். நீங்கள் யோசிக்­காமல் வாங்கும் ஒவ்­வொரு பொருட்­களும், பாதிப்பை ஏற்­ப­டுத்தும். இத்­த­கைய பழக்­கங்­களை அறிந்து கட்­டுப்­ப­டுத்­தினால் தான், நிதி வாழ்க்­கையை கட்­டுப்­பாட்டில் எடுத்துக் கொள்ள முடியும். செலவு செய்யும் ஒவ்­வொரு ரூபா­யையும், நீங்கள் அறிந்­தி­ருக்க வேண்டும்.

பட்­ஜெட்டை தீர்­மா­னித்தப் பின், எந்த செல­வு­களை எல்லாம் கட்­டுப்­ப­டுத்­தலாம் என, உங்­க­ளுக்கு தெரியும். நீங்கள் தினமும் மாலையில், காபி சாப்­பி­டு­ப­வ­ராக இருந்தால், அது பற்றி யோசிக்­கா­மலே கூட செலவு செய்து கொண்­டு இ­ருக்­கலாம். ஆனால் செல­வு­களை கண்­கா­ணிக்கத் துவங்கும் போது, இதற்­காக செல­வாகும் தொகை, யோசிக்க வைக்கும். அதற்­காக, காபி குடிப்­ப­தையே விட்­டு­விட வேண்டும் என்­றில்லை. கட்­டுப்­ப­டுத்திக் கொள்­ளலாம். இது போன்ற சின்ன சின்ன விஷ­யங்கள் மூலம், முக்­கிய தேவை­க­ளுக்­கான பணத்தை சேமிக்க முடியும்.

வரி, பிடித்தம் போக, மாதம் வரும் வரு­மானம் என்ன என்­ப­தையும், செல­வு­க­ளையும் குறித்து வைக்க வேண்டும். ஒவ்­வொரு ரசீது, கிரெடிட் கார்டு அறிக்கை மூலம், செல­வு­களை கணக்கில் கொள்ள வேண்டும். இதன் பின் பட்­ஜெட்­டிற்­கான திட்ட­மி­டலை துவக்­கலாம். இவ்­வாறு செய்­வதன் மூலம், தேவை­யில்­லாத செல­வு­களை கண்­ட­றிந்து தவிர்க்­கலாம்.

செலவு போக எஞ்­சியத் தொகை சேமிப்­பாக அமையும். ஆனால், மாதந்­தோறும் வரு­மா­னத்தில், 10 சத­வீத தொகையை, சேமிப்­புக்கு என முத­லி­லேயே எடுத்து வைத்­து­ விட வேண்டும். சேமிப்பை ஒரு செல­வாக கரு­தலாம். இந்த தொகை தானாக சேமிப்பு கணக்கில் சென்­ற­டையும் வகையில் ஏற்­பாடு செய்­யலாம். இது மிகவும் எளி­தா­னது. இந்த மூலம் சேரும் தொகை நல்ல முத­லீ­டாக அமையும். அது மட்டும் அல்ல, சேமிப்பை தானி­யங்கி மய­மாக்­கு­வதன் மூலம், மாதம் வீட்­டிற்கு கொண்டு வரும் வரு­மானம் கொஞ்சம் குறையும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)