சிறு­தொ­ழில்­க­ளுக்கு ரொக்­க­மில்லா பரி­வர்த்­தனைசிறு­தொ­ழில்­க­ளுக்கு ரொக்­க­மில்லா பரி­வர்த்­தனை ... மலேஷியாவின் கியோடா நிறுவனம் இந்தியாவில் ஸ்டோர்களை அமைக்கிறது மலேஷியாவின் கியோடா நிறுவனம் இந்தியாவில் ஸ்டோர்களை அமைக்கிறது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி கணக்­குடன் ஆதார் எண் இணைக்கும் வழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2017
07:43

வரு­மான வரி தாக்கல், அரசு மானி­யங்கள் பெறு­வது, நிதி பரி­வர்த்­த­னைகள் உள்­ளிட்­ட­வற்­றுக்கு ஆதார் எண் கட்­டா­ய­மாக்­கப்­பட்ட நிலையில், வங்கி கணக்­கு­க­ளுக்கும் ஆதார் எண் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய வங்கி கணக்கு துவங்க, ‘ஆதார்’ எண் கட்­டாயம் என்­ப­தோடு, ஏற்­க­னவே உள்ள வங்கி கணக்­கு­களு­டனும் ஆதார் எண் இணைக்­கப்­பட வேண்டும். வங்கி கணக்­குடன் ஆதார் எண்ணை இணை­ய­தளம் மூலம் அல்­லது கிளைகள் மூலம் மேற்­கொள்­ளலாம். பெரும்­பா­லான வங்­கிகள், இணைய வங்கிச் சேவை, ஏ.டி.எம்., – எஸ்.எம்.எஸ்., உள்­ளிட்­டவை மூலம், இந்த வச­தியை வழங்­கு­கின்­றன.

இணைய வசதி :
இணைய வங்கிச் சேவை வச­தியை பயன்­ப­டுத்­து­ப­வர்கள், வங்கி இணை­ய ­த­ளத்தில் கணக்­குகள் அல்­லது சேவைகள் பகு­தியில், ஆதார் இணைப் ­பிற்­கான வச­தியை அணு­கலாம். வங்கி கணக்கு எண்ணை தேர்வு செய்து, ஆதார் எண்ணை சமர்ப்­பித்து, விப­ரங்­களை சமர்ப்­பித்த பின், வங்கி இவற்றை சரி பார்த்து இணைப்பை பூர்த்தி செய்யும். இதற்கு, நான்கு நாட்கள் வரை ஆகலாம்.

ஸ்டேட் வங்கி உள்­ளிட்ட சில வங்­கிகள், எஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் எண்ணை இணைக்க வழி செய்­கின்­றன. ஆதார் எண் இணைக்­கப்­ப­ட­வில்லை எனில், இது குறித்து, எஸ்.எம்.எஸ்., வாயி­லாக தகவல் தெரி­விக்­கப்­படும். வங்கி குறிப்­பிடும் எண்­ணுக்கு செய்தி அனுப்பி, வங்கி கணக்கு எண் மற்றும் இடை­வெ­ளி­யுடன் ஆதார் எண்ணை சமர்ப்­பிக்­கலாம். இணைப்பு குறித்த தகவல் தெரி­விக்­கப்­படும்.
ஏ.டி.எம்., மையம் மூலம் :
சில வங்­கிகள், ஏ.டி.எம்., மையங்கள் மூலமும், இந்த வச­தியை அளிக்­கின்­றன. ஏ.டி.எம்., மையத்தில், டெபிட் கார்டை ‘ஸ்வைப்’ செய்து, பதி­வுகள் பகு­தியில் தேர்வு செய்து, ஆதார் பதிவை நாட வேண்டும். அதன் பின் வங்கி கணக்கு எண்ணை தேர்வு செய்து, ஆதார் எண்ணை குறிப்­பிட வேண்டும். ஒரு சில வங்­கிகள், ‘மிஸ்டு கால்’ மூலம் ஆதார் எண் இணைப்பு வச­தியை வழங்­கு­கின்­றன. வங்கி கணக்­குடன் ஆதார் எண்ணை இணைப்பு, சிக்கல் இல்­லாத நடை­முறை தான்.

வங்கி கிளைக்கு நேராக சென்று, உரிய விப­ரங்­களை கொடுத்தும், இதை இணைக்­கலாம். எனினும் சிறிய கணக்­கு­க­ளுக்கு இது கட்­டாயம் இல்லை. சுய சான்­றிதழ் அளித்து, இத்­த­கைய கணக்கை துவக்­கலாம். இந்த வகை கணக்­குகள் பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை கொண்­டவை.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)