மாலைநேர நிலவரம் : தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லைமாலைநேர நிலவரம் : தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை ... ‘பேசல் 3’ அமல்படுத்துவதை ஒத்திவைக்கலாம் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ஒய்.வி.ரெட்டி ‘பேசல் 3’ அமல்படுத்துவதை ஒத்திவைக்கலாம் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ... ...
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2017
22:34

வசூல் செய்த, ஜி.எஸ்.டி., வரியை, எந்த தேதிக்­குள் செலுத்த வேண்­டும்?– அரசு, முகப்­பேர், திருப்­பூர்
ஜி.எஸ்.டி., வரியை, வழங்­கல் நடந்­த­தற்கு அடுத்த மாதம், 20ம் தேதிக்­குள் செலுத்த வேண்­டும்.
​பெட்­ரோல் மற்­றும் டீசல் மீது, ஜி.எஸ்.டி., வரி எந்த சத­வீ­தத்­தில் விதிக்­கப்­படும். இத­னால், பெட்­ரோல் விலை எவ்­வ­ளவு உய­ரும்?– முத்­தையா, கடம்­பூர்
பெட்­ரோ­லிய பொருட்­க­ளான கச்சா எண்­ணெய், பெட்­ரோல், டீசல், இயற்கை எரி­வாயு​ ஆகி­ய­வற்­றின் மீது, ​தற்­போது, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு இல்லை​. எனவே, ஜி.எஸ்.டி., வரி­யால் பெட்­ரோல் விலை உய­ராது.

ஒரு மாநி­லத்­தி­லி­ருந்து வேறு மாநி­லத்­திற்கு சப்ளை செய்­ப­வர், கலவை திட்­டத்­திற்கு தகு­தி­யா­ன­வரா?– குமார், சென்னை

கலவை திட்­டத்தை தேர்வு செய்­ப­வ­ரால், உள்­மா­நி­லத்­திற்­குள் சப்ளை செய்ய இய­லும். அனைத்து வழங்­கல்­க­ளை­யும் மாநி­லத்­திற்­குள்­ளேயே நிகழ்த்­திய வரிக்­குட்­பட்­ட­வர்­களே, கலவை திட்­டத்­திற்கு தகுதி பெறு­வர். வேறு மாநி­லத்­திற்கு சப்ளை செய்­தால், அவ­ரால் கலவை திட்­டத்­தில் தொடர இய­லாது.

​​ஒரு மாநி­லத்­தில் இருந்து, வேறு மாநி­லத்­திற்கு செய்­யும் விற்­ப­னை­யில், தற்­போது, ‘சி’ பார்ம் பெற்று, 2 சத­வீத, ஜி.எஸ்.டி., வரி­யில் விற்­கி­றோம். ஜி.எஸ்.டி., வரி அமைப்­பில், வேறு மாநி­லத்­திற்கு செய்­யும் விற்­ப­னை­யில், ‘சி’ பார்ம் பெற வேண்­டுமா?– கிஷோர், நெல்லை

ஜி.எஸ்.டி., அமைப்­பில், தற்­போது நடை­மு­றை­யில் உள்ள, ‘சி’ பார்ம் முறை நிறுத்­தப்­படும். நீங்­கள் எந்த வித­மான பார்­மும் பெற வேண்­டாம்.​ வேறு மாநி­லத்­திற்கு செய்­யும் விற்­ப­னை­யில்,​ ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி., (ஐ.ஜி.எஸ்.டி.,) வரி வசூல் செய்து செலுத்த வேண்­டும்.
​​எங்­கள் நிறு­வ­னம், மென்­பொ­ருள் சேவை செய்து வரு­கிறது. தற்­போது, மென்­பொ­ருள் விற்­ப­னைக்கு, ‘வாட்’ மற்­றும் சேவை வரி வசூ­லிக்­கி­றோம். ஜி.எஸ்.டி.,யில், மென்­பொ­ருள் விற்­ப­னைக்கு இரட்டை வரி உண்டா?– கோகுல், திருச்சி
ஜி.எஸ்.டி., அமைப்­பில், மென்­பொ­ருள் விற்­ப­னைக்கு இரட்டை வரி இருக்­காது. அவை விற்­ப­னை­யின் தன்மை பொறுத்து, சேவை­யா­கவோ அல்­லது பொரு­ளின் விற்­ப­னை­யா­கவோ கரு­தப்­படும். வரி சத­வீ­தம் மாறு­பட்டு இருக்­காது.

நாங்­கள், ரியல் எஸ்­டேட் நிறு­வ­னம் ஒன்றை நடத்தி வரு­கி­றோம். நிலத்தை விற்­கும் போது, அதற்கு, ஜி.எஸ்.டி., வரி விதிக்­கப்­ப­டுமா?– கணேஷ், கூடு­வாஞ்­சேரி
நிலம் அல்­லது முழு­மை­யாக கட்­டப்­பட்ட கட்­ட­டத்­தின் விற்­பனை, ஜி.எஸ்.டி.,யின் கீழ், ஒரு பொரு­ளா­கவோ அல்­லது சேவை­யா­கவோ
கரு­தப்­ப­டாது. எனவே, இவை மீது, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­ட
­மாட்­டாது.

ஐயா, நான், ஆன்­மிக சுற்­றுலா பயண ஏற்­பா­டு­களை, கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக செய்து வரு­கி­றேன். ஜி.எஸ்.டி., பதி­வும் செய்து விட்­டேன். நான் எத்­தனை சத­வீ­தம், ஜி.எஸ்.டி., வரி வசூல் செய்ய வேண்­டும். - கோபால், கோவை
நீங்­கள் சலுகை வரி­யாக, 5 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்­டும். உங்­க­ளுக்கு உள்­ளீட்டு வரி சலுகை (இன்­புட் டேக்ஸ் கிரெ­டிட்) கிடைக்­காது.


ஜி.எஸ்.டி., முறை­யில், அனைத்து இன்­வாய்­சும் மின்­னணு முறை­யில் தான் இருக்க வேண்­டுமா? – வெங்­க­டேஷ், காஞ்­சி­பு­ரம்
விற்­பனை பட்­டி­யல் மின்­னணு முறை­யில் தான் இருக்க வேண்­டும் என, கட்­டா­யம் இல்லை; கையேட்டு முறை­யில் கூட இருக்­க­லாம். மின்­னணு முறை­யில் இருந்­தால், ரிட்­டர்ன் படி­வத்தை தாக்­கல் செய்­வது சுல­ப­மாக இருக்­கும்.


- ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)