கமாடிட்டி சந்தை நிலவரம்கமாடிட்டி சந்தை நிலவரம் ... இந்­தி­யா­வில் வேலை­வாய்ப்பு: நம்­பிக்கை தரும் சர்­வேக்­கள் இந்­தி­யா­வில் வேலை­வாய்ப்பு: நம்­பிக்கை தரும் சர்­வேக்­கள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நிறை குறை­களை உணர்ந்து தேர்வு செய்ய வேண்­டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2017
00:20

உச்­சத்­தில் தொடர்ந்து வீற்­றி­ருக்­கும் சந்தை குறி­யீ­டு­கள், சந்­தைக்­குள் வர காத்­தி­ருப்­போர் மன­தில் ஒரு­வித அவ­சர நிலையை தொடர்ந்து ஏற்­ப­டுத்தி வரு­கிறது. குறிப்­பாக, வைப்பு கணக்­கு­களில் இருந்து பங்கு சந்­தைக்கு இடம்­பெ­யர விரும்­பு­வோர் அலை அலை­யாக, பரஸ்­பர நிதி திட்­டங்­களில் பணத்தை செலுத்­து­கின்­ற­னர்.

பரஸ்­பர நிதி திட்­டங்­களில் எந்த வகை­யான தேர்­வு­களை செய்­கி­றோம் என்­பது மிக முக்­கி­யம். நாம் எடுக்­கும் முடி­வு­களும், திட்ட தேர்­வு­களும் நமக்கு உகந்­த­வையா என்­பதை உணர்ந்து செய்­வது மிக அவ­சி­யம். தற்­போது, வைப்பு கணக்­கில் இருந்து பங்கு சந்­தைக்கு இடம் பெய­ரும் முத­லீட்­டா­ளர்­கள் பெரு­வா­ரி­யாக, பாலன்ஸ்ட் பண்ட் என்ற திட்­டங்­களில் முத­லீ­டு­களை குவிக்­கின்­ற­னர். மாதா மாதம் ஒரு சத­வி­கி­தம், டிவி­டெண்ட் மூலம் கிடைக்­கும் என்ற வாய்­வழி உறு­தி­மொ­ழி­யின் பேரில் பொது­மக்­கள் தங்­கள் பணத்தை இந்த வகை முத­லீ­டு­களில் அவ­ச­ர­மாக செலுத்­து­கின்­ற­னர்.

டிவி­டெண்ட் என்­பது எப்­படி தீர்­மா­னிக்­கப்­ப­டு­கிறது என்­பதை முத­லீட்­டா­ளர்­கள் புரிந்து கொள்­வது அடிப்­படை தேவை. பொது­வாக டிவி­டெண்ட் என்­பது லாபத்­தில் இருந்து கொடுக்­கப்­பட வேண்­டும். ஆனால், அந்த லாபம் உங்­கள் முத­லீட்­டி­லி­ருந்து இருக்க தேவை இல்லை. திட்­டம் துவங்­கிய நாள் முதல் கூடி இருக்­கும் நிகர லாபத்­தில் இருந்து டிவி­டெண்ட் கொடுக்க நம் வரை­மு­றை­கள் அனு­ம­திக்­கின்றன. ஆகவே, நாம் முத­லீடு செய்த பணத்­தின் மதிப்பு குறைந்­தா­லும், நமக்கு தொடர்ந்து டிவி­டெண்ட் கொடுக்க முடி­யும்.

ஆனால், இடைப்­பட்ட காலத்­தில் ஒரு­வேளை நாம் பணத்தை திரும்­பப்­பெற வேண்­டி­வந்­தால் நமக்கு கிடைக்­கும் தொகை முத­லீட்டை விட குறைய வாய்ப்பு உண்டு. ஆகவே, குறு­கிய கால முத­லீடு செய்­வோர் இதை நன்கு புரிந்து கொள்­வது நல்­லது. வட்­டிக்­காக வைப்பு கணக்கு வைப்­போர், வட்டி குறை­யும் சூழ­லில் சற்று நுணுக்­க­மாக ஆய்வு செய்­ய­ வேண்­டும். மாற்று முத­லீ­டு­களை தேர்வு செய்­வ­தில் உள்ள நிறை குறை­களை நன்கு உணர்ந்து தேர்வு செய்ய வேண்­டும்.வைப்பு கணக்­கில் இருந்து பாலன்ஸ்ட் பண்ட் திட்­டங்­க­ளுக்கு மாற்­றும் முன் சில கேள்­வி­க­ளுக்கு விடை கண்­டு­கொள்ள வேண்­டும். நம் முத­லீட்­டின் கால அவ­கா­சம் என்­ன­வாக இருக்க வேண்­டும்?

முத­லில், அந்த முத­லீட்டு பணத்தை குறைந்­த­பட்­சம் மூன்று ஆண்­டு­க­ளுக்கு நாம் திரும்ப பெற­வேண்­டிய அவ­சி­யம் இருக்­கக் கூடாது. நீண்­ட­கால முத­லீடு மட்­டுமே இந்த வகை திட்­டங்­களில் வெற்றி பெறும் என்­பதை தெளி­வாக புரிந்து கொள்­வது அவ­சி­யம். குறு­கி­ய­கால முத­லீ­டு­க­ளுக்கு இந்த திட்­டங்­கள் ஏற்­றவை அல்ல என்­பதை தெளி­வாக உணர வேண்­டும்.வைப்பு கணக்­கின் பாது­காப்பு இந்த முத­லீ­டு­களில் உண்டா? நம்மை பாது­காத்து கொள்ள என்ன செய்ய வேண்­டும்?வைப்பு கணக்­கில் இருக்­கும் பாது­காப்பு இவற்­றில் நிச்­ச­யம் இல்லை. மேலும், சந்தை வீழ்ச்சி கண்­டால் இந்த வகை திட்­டங்­களும் மதிப்­பி­ழக்­கும். குறு­கிய கால மதிப்­பி­ழப்­பிற்கு நாம் மன­த­ள­வில் தயா­ராக இருக்­க­ வேண்­டும். அந்­நே­ரங்­களில், அச்­சம் நம்மை எந்த அவ­சர நட­வ­டிக்­கை­க­ளி­லும் தள்­ளா­மல் உறுதி காக்­கும் மனம் வேண்­டும். சந்­தை­யின் ஏற்ற தாழ்­வு­களை சம­நி­லைப்­பாட்­டோடு ஏற்க கற்­றுக்­கொள்ள வேண்­டும். ஒரு போதும் அவ­சர முடி­வு­களை எடுக்­கும் நிலைக்கு நாம் போகக்­கூ­டாது.

குறு­கிய கால முத­லீ­டு­களை எங்கு செய்­தால் நல்­லது?வங்­கி­யில் அவ­சர தேவைக்கு வைத்­தி­ருக்­கும் பணத்தை பங்கு திட்­டங்­களில் ஒரு­போ­தும் முத­லீடு செய்­யக்­கூ­டாது. அவற்றை குறு­கிய கால வைப்பு கணக்­கு­க­ளிலோ, அல்­லது பரஸ்­பர நிதி­களின் குறு­கிய கால கடன் திட்­டங்­க­ளிலோ முத­லீடு செய்­வது நல்­லது. நம் பணத்தேவை­களை நன்கு புரிந்து அவை எந்த வகை­யி­லும் சிக்­கல்­க­ளுக்கு ஆளா­கா­மல் இருக்க முத­லீட்டு தேர்­வு­களை கவ­ன­மாக செய்­ய­வேண்­டி­யது மிக அவ­சி­யம்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)