பதிவு செய்த நாள்
23 ஆக2017
23:52
புதுடில்லி : கடந்த ஜூலையில், ஐடியா செல்லுலார், வோடபோன் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள், 43.7 லட்சம் மொபைல் போன் சந்தாதாரர்களை இழந்துள்ளன.
இது குறித்து, இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜூலையில், ஐடியா செல்லுலார், வோடபோன், ஏர்செல், டெலினார் ஆகிய நிறுவனங்கள், 43.7 லட்சம் மொபைல் போன் சந்தாதாரர்களை இழந்துள்ளன. இதில், ஐடியா செல்லுலார், 23 லட்சம்; வோடபோன், 13.89 லட்சம்; ஏர்செல், 3.91 லட்சம்; டெலினார், 2.75 லட்சம் என்ற அளவில், சந்தாதாரர்களை இழந்துள்ளன.
அதே சமயம், ஜூலையில், ஏர்டெல் நிறுவனம், 6 லட்சம் புதிய மொபைல் போன் சந்தாதாரர்களை இணைத்து உள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த மொபைல் போன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை, 28.12 கோடியாக உள்ளது. சந்தாதாரர்களை சேர்த்ததில், உ.பி., கிழக்கு, 8.41 கோடி உடன் முதலிடத்திலும்; மஹாராஷ்டிரா, பீஹார் மாநிலங்கள், அடுத்த இடங்களிலும் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|