மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் கருத்து:‘தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்க தவறும்எந்த நிறுவனமும் சிக்கலை சந்திக்க நேரும்’மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் கருத்து:‘தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்க ... ... இந்தியாவில் 20 லட்சம் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை இந்தியாவில் 20 லட்சம் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘வாகன துறை வளர்ச்சிக்கு நிலையான கொள்கை தேவை’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2017
01:38

புதுடில்லி:‘‘வாகன துறை­யின் வளர்ச்­சிக்கு, அர­சின் கொள்­கை­கள் நிலை­யாக இருக்க வேண்­டும்,’’ என, டி.வி.எஸ்., கம்­பெனி தலை­வர் வேணு சீனி­வா­சன் தெரி­வித்து உள்­ளார்.
டில்­லி­யில், இந்­திய வாகன தயா­ரிப்புநிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பின் மாநாட்­டில், அவர் மேலும் பேசி­ய­தா­வது:வாகன துறை வளர்ச்­சிக்கு, அதிக வாய்ப்­பு­கள் உள்ளன. இத்­துறை, திற­மை­யான தொழி­லா­ளர்­கள், ஆராய்ச்சி, அடிப்­படை கட்­ட­மைப்பு ஆகி­யவை தொடர்­பான ஆலோ­ச­னை­களை, அர­சுக்கு தொடர்ந்து வழங்கி வர வேண்­டும்.
மிக முக்­கி­ய­மாக, வாகன துறை­யின் வளர்ச்­சிக்கு, நிலை­யான கொள்­கையை, அரசு கடைப்­பி­டிக்க வேண்­டும்.துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, நீதி­மன்­றங்­கள் தலை­யீடு, சுற்­றுச்­சூ­ழல் மாசு கட்­டுப்­பாடு தொடர்­பான, ‘பி.எஸ்., – 4’ விதி­களின் அறி­மு­கத்­தில் செய்த மாற்­றம் போன்­றவை, வாகன துறைக்கு கடும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தின.
நாம், மனி­த­வள மேம்­பாட்டு அமைச்­ச­கத்­து­டன் இணைந்து செய­லாற்ற வேண்­டும். இந்­திய தொழில்­நுட்ப மைய பட்­ட­தா­ரி­களின் ஆற்­றலை, முழு­மை­யாக பயன்­ப­டுத்த வேண்­டும்.சீனாவை போல, இந்­தி­யா­வில் பல்­க­லைக் கழ­கங்­களும், மின்­கல ஆய்­வுக் கூடங்­களும் இல்லை. சீனா­வில், ஒரு பல்­க­லை­யில், 25 ஆயி­ரம் மாண­வர்­கள் படிக்­கின்­ற­னர்.
இதில், சரி­பாதி அளவு கூட, இந்­தி­யா­வின் அனைத்து தொழில்­நுட்ப மையங்­களில், மாண­வர்­கள் இல்லை. தொழி­லா­ளர்­களின் திறன் வளர்ப்பு பயிற்­சிக்கு, அதிக முக்­கி­யத்­து­வம் அளிக்க வேண்­டும். அரசு, தேவை­களை அதி­க­ரிக்க, தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும்.வாகன துறை, நேர­டி­யா­க­வும், மறை­மு­க­மா­க­வும், 2 கோடி பேருக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கிறது; இது, 2022ல், 3.80 கோடி­யாக உய­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஜி.எஸ்.டி., வெளிப்­ப­டை­யான வரி செலுத்­தும் நடை­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்தி, எதிர்­கால வளர்ச்­சிக்கு வித்­திட்­டுள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)