மகிந்திராவின் டிரைவர் இல்லா புதிய டிராக்டர்கள்மகிந்திராவின் டிரைவர் இல்லா புதிய டிராக்டர்கள் ... ஐகியா நிறுவனம் சென்னையில் 2 கிளைகளை துவங்க முடிவு ஐகியா நிறுவனம் சென்னையில் 2 கிளைகளை துவங்க முடிவு ...
நாட்டின் பொருளாதார நிலை உண்மையாகவே மந்தம்: எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2017
00:38

மும்பை : ‘நாட்­டின் பொரு­ளா­தா­ரம், 2016 செப்., முதல், உண்­மை­யா­கவே மந்த நிலை­யில் உள்­ளது’ என, ஆய்வு நிறு­வ­ன­மான, எஸ்.பி.ஐ., ரிசர்ச் தெரி­வித்து உள்­ளது.

‘தற்­போ­தைய பொரு­ளா­தார மந்த நிலை, தொழில்­நுட்­பக் கார­ணங்­க­ளால் ஏற்­பட்­டுள்ள குறு­கிய கால தாக்­கமே. உண்­மை­யில், பொரு­ளா­தா­ரம் சிறப்­பாக வளர்ச்சி கண்­டுள்­ளது’ என, பர­வ­லாக கருத்­துக்­கள் தெரி­விக்­கப்­பட்டு வரும் நிலை­யில், அவற்­றுக்கு மாறான வகை­யில், எஸ்.பி.ஐ., ரிசர்ச் ஆய்­வ­றிக்கை ஒன்றை வெளி­யிட்டு உள்­ளது.

கவலை வேண்டாம்:
கடந்த ஆண்டு செப்., முதல், ஜி.டி.பி., எனப்­படும், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி மந்­த­ம­டைந்து உள்­ளது. இது, நடப்பு நிதி­யாண்­டின், ஏப்., – ஜூன் வரை­யி­லான, முதல் காலாண்டு வரை­யி­லும் நீடித்­து உள்­ளது. ஆகவே, இந்த மந்த நிலையை, தொழில்­நுட்ப புள்­ளி­ வி­ப­ரங்­கள் அடிப்­ப­டை­யில் கணிக்­கப்­பட்ட, குறு­கிய கால தாக்­கம் என்றோ அல்­லது இந்த சுணக்­கம் நிலை­யற்­றது எனவோ கூற முடி­யாது. உண்­மை­யில், ஜி.டி.பி., தொடர்ந்து மந்த நிலை­யில் இருக்­கிறது. எனவே தான், இந்த மந்த நிலை தற்­கா­லி­க­மா­னதா அல்­லது இல்­லையா என்ற கேள்­வியை எழுப்பி உள்­ளது.

இதற்­கான பதில், அரசு திட்­டங்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டு­களை அதி­க­ரிப்­ப­தில் அடங்கி உள்­ளது. கடன் கொள்­கையை மாற்­றா­மல், அதே சம­யம், திட்­டங்­க­ளுக்கு அதி­கம் செல­விட வேண்­டும். இத­னால், நிதிப் பற்­றாக்­குறை அதி­க­ரிக்­கும். தர நிர்­ணய நிறு­வ­னங்­கள், கடன் தகுதி மதிப்­பீட்டை குறைப்­ப­தாக அச்­சு­றுத்­தும். அதை பற்றி, கவலை வேண்­டாம்.

பாதிப்பு இல்லை:
கடந்த, 2008ல், சர்­வ­தேச பொரு­ளா­தார மந்த நிலை­யின் போது, இது போன்ற அச்­சு­றுத்­தல் விடுத்த போதி­லும், அத­னால், பெரி­ய­ள­வில் பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை. இந்­தி­யாவை பொறுத்­த­வரை, 25 ஆண்­டு­க­ளாக, தர நிர்­ணய பட்­டி­ய­லில், நிலை­யாக முன்­னேறி வரு­கிறது. ஆகவே, உட­ன­டி­யாக, திட்­டச் செல­வி­னங்­களை அதி­க­ரிப்­ப­தன் மூலம் மட்­டுமே, பொரு­ளா­தார சுணக்க நிலை­யில் இருந்து மீள முடி­யும். நிதி பொறுப்பு மற்­றும் நிதி­நிலை அறிக்கை மேலாண்மை சட்­டம், நிதிப் பற்­றாக்­குறை இலக்­கில், 0.5 சத­வீ­தத்தை உயர்த்த வகை செய்­கிறது. இதை பயன்­ப­டுத்தி, திட்­டச் செல­வி­னங்­களை அதி­க­ரிக்க வேண்­டும். அதே சம­யம், நிகர கடன்­களை கட்­டுக்­குள் வைக்க வேண்­டும்.

அதி­க­ள­வில், குறு­கிய கால நிதிச் சந்தை கடன்­களை வாங்­கு­வது குறித்து பரி­சீ­லிக்­க­லாம். வள­மான மூல­த­னத்தை கொண்­டுள்ள, வலி­மை­யான பொதுத் துறை நிறு­வ­னப் பங்­கு­களை திரும்­பப் பெற்று, அதி­க­ள­வில், அரசு கடன் பத்­தி­ரங்­களை வெளி­யி­ட­லாம். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

நிதியாண்டு ஜி.டி.பி.,
2013 – 14 6.52014 – 15 7.22015 – 16 7.92016 – 17 7.1
2017 – 18 5.7(ஏப்., – ஜூன்) (சத­வீ­தத்­தில்)

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)