பதிவு செய்த நாள்
24 செப்2017
06:11
அமெரிக்காவின், யு.எம்., மோட்டார் சைக்கிள் நிறுவனம், தன், ‘ரெனகேட்’ வரிசை பைக்குகளில், ‘கமாண்டோ – மோஜவே’ மற்றும், ‘கமாண்டோ கிளாசிக்’ ஆகிய, புதிய ரக பைக்குகளை சந்தைப்படுத்தி உள்ளது.சென்னையில், ரெனகேட் – கமாண்டோ கிளாசிக்கின், ஷோரூம் துவக்க விலை, 1,92,142 ரூபாய்; ரெனகேட் – கமாண்டோ மோஜவே, 1,85,683 ரூபாய்க்கு கிடைக்கும். பைக் பராமரிப்புக்காக, 24 மணி நேரமும் இயங்கும், ‘ரோடு சைடு’ உதவி வசதி, சென்னையில் ஏற்கனவே அமலில் உள்ளது. ‘ரெனகேட் கமாண்டோ’வில், 279.5 ‘சிசி’ டி லிக்விட் -இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது; ஆறு கியர்கள் உள்ளன.ரெனகேட் – கமாண்டோ மோஜவே, கமாண்டோ கிளாசிக்கின் அதே இன்ஜினை பெற்றுள்ளது. ஆனால், புதிய பாணி மற்றும் புதிய நிறத்தில் வடிவமைக்கப் பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|