பதிவு செய்த நாள்
14 அக்2017
03:59
புதுடில்லி : இந்த ஆண்டு, தீபாவளியை ஒட்டி, சீன பொருட்களின் விற்பனை, 45 சதவீதம் அளவுக்கு குறையக்கூடும் என, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
தீபாவளியின் போது, சீன தயாரிப்புகளான, விளக்குகள், சுவர் அலங்கார பொருட்கள், பரிசுப் பொருட்கள் போன்றவை, சமீபகாலமாக, பெருமளவில் விற்பனையாகின. ஆனால், இம்முறை, கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும் போது, 40 – 45 சதவீதம் வரை, விற்பனையில் சரிவு இருக்கும் என்கிறது, ‘அசோசெம் சோஷியல் டெவலப்மென்ட் பவுண்டேஷன்’ அமைப்பின் ஆய்வு.
இது குறித்து, ‘அசோசெம்’ தெரிவித்ததாவது: தற்போது மக்கள், உள்நாட்டு தயாரிப்புகளை அதிகம் விரும்பத் துவங்கி உள்ளனர். விளக்குகளை பொறுத்தவரை, மண்ணால் ஆன, உள்நாட்டு தயாரிப்பை வாங்குவதில், அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதனால், இம்முறை, சீன பொருட்களின் தீபாவளி விற்பனை, 45 சதவீதம் அளவுக்கு, சரிவை தொடும் என, தெரிகிறது. கடந்த ஆண்டில், 30 சதவீதம் அளவுக்கு, சரிவு இருந்தது. மேலும், எலக்ட்ரானிக் பொருட்கள், எல்.இ.டி., விளக்குகள், மொபைல் போன்கள் போன்றவற்றின் விற்பனையும், 15 – 20 சதவீதம் அளவு, சரியும் என, தெரிகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|