6 மாதங்களில் இல்லாத அளவு நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, ‘சூப்பர்’  தங்கம் இறக்குமதியும் குறைந்தது6 மாதங்களில் இல்லாத அளவு நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, ‘சூப்பர்’ தங்கம் ... ... ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.68 ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.68 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சின்ன சின்ன செயல்­களின் ஆற்றல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2017
00:03

இந்த ஆண்­டுக்­கான பொரு­ளா­தார நோபல் பரிசு பெறும் அமெ­ரிக்க பொரு­ளா­தார வல்­லுனர், ரிச்­சர்டு தாலர், சக பேரா­சி­ரி­ய­ருடன் இணைந்து சில ஆண்­டு­க­ளுக்கு முன் எழு­திய, ‘நட்ஜ்’ புத்­த­கத்தில், நடைமுறை பலன் சார்ந்த பொருளாதார கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

எல்லா வாய்ப்­பு­களும் திறந்தே இருக்கும் நிலையில், குறிப்­பிட்ட ஒரு திசையில் பய­ணிக்கத் துாண்டும் சிறிய மாற்­றங்கள் அல்லது சிறு குறிப்­பு­களே துாண்டுதல் (நட்ஜ்) என, புரிந்து கொள்­ளப்­ப­டு­கி­றது. நண்­ப­ருடன் பேசிக் கொண்­டி­ருக்கும் போது, வெளியே செல்லும் அழைப்பை ஏற்க மன­மில்­லாத நிலையில், லேசான சீண்­ட­லுக்­குப்பின் இதற்கு ஒப்­புக்­கொண்டு, அந்த பய­ணத்தால் மன நிறைவை பெறு­வது உண்­டல்­லவா? அது போலவே வாழ்க்கையில் பல விஷ­யங்கள் துாண்­டு­தலால் சாத்­தியம்.

துாண்­டுதல் மூலம் சிறிய மாற்­றங்கள் அல்­லது செயல் மூல­மாக ஒரு­வரை, அவ­ருக்கு பலன் தரும் முடி­வு­களை மேற்­கொள்ள வைக்க முடியும். எடுத்­துக்­காட்­டாக, காபி மையங்­களில், ‘பில் கவுன்டர்’ அருகே மிட்­டாய்­க­ளுக்குப் பதில் பழங்­களை வைப்­பதன் மூலம், வாடிக்­கை­யா­ளர்­களை அதிக அளவில் பழங்­களை வாங்க வைக்க முடியும். நாம் தினந்­தோறும் இத்­த­கைய துாண்­டு­தல்­க­ளுக்கு இலக்­காகிக் கொண்டே இருக்­கிறோம். சில நேரங்­களில் இவை மோச­மான முடி­வு­க­ளுக்கும் கார­ண­மாக அமை­கின்­றன. ஆனால், சுற்­றுப்­பு­றத்தை மாற்றி அமைப்­பதன் மூலம் சிறந்த துாண்­டு­தல்கள் அமையும் வகையில் செய்ய முடியும்.

வேறு வழி­யில்­லாமல் இணையும் நிலையை ஏற்­ப­டுத்தும் சிறந்த துாண்­டு­த­லாகும். அதா­வது நீங்கள் எதையும் செய்­யா­விட்டால், தற்­போ­துள்ள நிலையில் தொடர்­வதன் மூலம், உங்­க­ளுக்கு ஏற்ற நிலையை பெறும் வகையில் இது அமை­கி­றது. வர்த்­தக நிறு­வ­னங்­களும் இந்த முறையை திறம்­பட பயன்­படுத்தி வரு­கின்­றன. சந்­தாவை ரத்து செய்­யா­விட்டால் அவை தொடரும் என அறி­விக்­கப்­ப­டு­வது, இதற்­கான உதா­ரணம். அரசும் கொள்கை முடி­வு­களை செயல்­ப­டுத்த இந்த முறையை பயன்­ப­டுத்­தலாம். இதன் மூலம் ஒட்­டு­மொத்த சமூ­கத்­திற்கும், தேசத்­திற்கும் நல்ல பலனை உண்­டாக்க முடியும்.

இந்த கோட்­பாடு அடிப்­ப­டை­யி­லேயே பிரிட்டன் போன்ற நாடு­களில் பங்­கேற்­பா­ளர்கள் விலகிக் கொள்ளும் வாய்ப்­புடன், அனை­வரும் ஓய்­வூ­திய திட்­டத்தில் கட்­டா­ய­மாக சேர்க்­கப்­பட்டு வெற்­றி­க­ர­மாக செயல்­பட்டு வருகிறது. துாண்­டுதல் உத்­தியை சரி­யாக பயன்­ப­டுத்­தினால், அர­சாங்­கங்­களால் கொள்கை முடிவை செயல்­ப­டுத்தி அனை­வ­ருக்கும் பலனை அளிக்க முடியும். திட்­ட­மிடல் மற்றும் முடி­வு­களை செயல்­ப­டுத்தும் விதத்தில் இந்த அணு­கு­முறை பெரும் உத­வி­யாக இருக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)