சொத்து மதிப்பீட்டாளருக்கு அங்கீகாரம்: அரசாணை வெளியீடுசொத்து மதிப்பீட்டாளருக்கு அங்கீகாரம்: அரசாணை வெளியீடு ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.11 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.11 ...
பெருகி வரும் தொழில் வாய்ப்பால்... துப்பறியும் துறையில் கால் பதிக்க துடிக்கும் அமெரிக்க நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2017
04:59

புதுடில்லி : இந்­திய தொழில்­து­றை­யில், அன்­னிய நேரடி முத­லீடு பெருகி வரு­வ­தற்கு ஏற்ப,நிறு­வ­னங்­கள் தொடர்­பான துப்­ப­றி­யும் சேவைக்­கும் தேவை அதி­க­ரித்து வரு­கிறது. இதன் கார­ண­மாக, அமெ­ரிக்­கா­வில் முன்­ன­ணி­யில் உள்ள துப்­ப­றி­யும் நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வில் கால்­ப­தித்து வரு­கின்றன.மத்­திய அரசு, பெரும்­பா­லான துறை­களில், அன்­னிய நேரடி முத­லீட்டு விதி­களை தளர்த்­தி­யுள்­ளது. இத­னால், அன்­னிய முத­லீடு அதி­க­ரித்­துள்­ளது. அன்­னிய நிறு­வ­னங்­கள், இந்­திய நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து, கூட்­டாக செயல்­ப­டவே அதி­கம் விரும்­பு­கின்றன. இதற்கு, இந்­திய நிறு­வ­னங்­க­ளி­டம் உள்ள வலு­வான அடிப்­படை கட்­ட­மைப்பு வசதி, உள்­நாட்டு வர்த்­த­கச் சூழல் குறித்த பழுத்த அனு­ப­வம், நிர்­வாக நடை­மு­றை­களில் உள்ள ஆற்­றல் உள்­ளிட்ட பல கார­ணங்­கள் உள்ளன. இருந்­த­போ­தி­லும், அன்­னியநிறு­வ­னங்­கள், குறிப்­பாக, அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள், துளி­யும் லஞ்ச முறை­கே­டு­களில் ஈடு­ப­டா­மல், நியா­ய­மான முறை­யில், பிற நாடு­களில் தொழில் துவங்­கு­வ­தற்கே, முக்­கி­யத்­து­வம் அளிக்­கின்றன.அச்சம் ஏனெ­னில், பிற நாடு­களில் லஞ்ச முறை­கே­டு­கள் மூலம் அமெ­ரிக்க நிறு­வ­னங்­கள் தொழில் துவங்­கி­யது தெரி­ய­ வந்­தால், அந்­நாட்டு லஞ்ச ஊழல் தடுப்பு சட்­டப்­படி கடும் நட­வ­டிக்­கைக்கு ஆளாக நேரி­டும் என்ற அச்­சம் தான் கார­ணம்.அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த வால்­மார்ட், மோன்­ட­லெஸ் நிறு­வ­னங்­க­ளுக்கு, இத்­த­கைய பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. வால்­மார்ட், இந்­தியா தவிர்த்து, மெக்­சிகோ மற்­றும்சீனா­வில் முறை­கே­டான வழி­யில், தொழில் துவங்­கிய வழக்­கில், 300 மில்­லி­யன் டாலர் அப­ரா­தம் செலுத்த உள்­ளது.இத்­த­கைய நிலையை தவிர்க்க, அன்­னிய நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வில் தொழில் துவங்­கு­வ­தற்கு முன், துப்­ப­றி­யும் நிறு­வ­னங்­களின் சேவையை பயன்­ப­டுத்­து­கின்றன.இந்­நி­று­வ­னங்­கள், அன்­னிய நிறு­வ­னங்­கள் முத­லீடு செய்ய உள்ள இந்­திய நிறு­வ­னங்­களின் முழு ஜாத­கத்­தை­யும் ஆராய்ந்து, அறிக்கை அளிக்­கின்றன. அதில், நிறு­வ­னத்­திற்கு உள்ள சொத்து, கடன், வழக்­கு­கள் உள்­ளிட்ட அனைத்து விபரங்­களும் இடம் பெறும். அவற்­றின் அடிப்­ப­டை­யில், இந்­திய நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­வது குறித்து, அன்­னிய நிறு­வ­னங்­கள் முடிவு செய்­கின்றன.மின்ட்ஸ் குழுமம்துப்­ப­றி­யும் தொழி­லுக்கு வர­வேற்பு பெருகி வரு­வ­தால், அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, தனி­யார் துப்­ப­றி­யும் நிறு­வ­ன­மான, மின்ட்ஸ் குழு­மம், இந்­தி­யா­வில் வர்த்­த­கத்தை துவக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ளது. அது­போல, கலி­போர்­னி­யா­வின், பெர்க்லி ரீசர்ச் குழு­ம­மும், இந்­தி­யா­வில் கள­மி­றங்­கு­கிறது. ஏற்கனவே, அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, பின்­கர்­டன், க்ரால் நிறு­வ­னங்­கள், இந்­திய நக­ரங்­களில் கிளை பரப்பி, துப்­ப­றி­யும் தொழி­லில் ஈடு­பட்­டுள்ளன.இது தவிர, உள்­நாட்­டில், மத்­திய புல­னாய்வு அமைப்பு, அம­லாக்க இயக்­கு­ன­ர­கம், ரிசர்வ் வங்கி, ‘செபி’ ஆகி­ய­வை­யும், பொரு­ளா­தார குற்­றங்­கள் தொடர்­பான விப­ரங்­களை சேக­ரிக்க, தனி­யார் துப்­ப­றி­யும் நிறு­வ­னங்­களை நாடு­கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)