தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ... மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்தியாவில் ஹோன்டா கிரேசியா அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2017
16:02

புதுடில்லி: இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரேசியா ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹோன்டா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்கூட்டர் விலை ரூ.57,827 (எக்ஸ்-ஷோரூம், டில்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஹோன்டா கிரேசியா மூன்று வித மாடல்கள் - எஸ்.டி.டி. அலாய் மற்றும் டி.எல்.எக்ஸ். கிடைக்கிறது. முன்னதாக புதிய ஸ்கூட்டரின் முன்பதிவுகள் துவங்கி நடைபெற்றது. ரூ.2000 செலுத்தி முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.
புதிய கிரேசியா ஸ்கூட்டரின் முன்பக்கம் 12 இன்ச் அலாய் வீல், பின்புறம் 10 இன்ச் வீல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீல்களில் 90/90-12 மற்றும் 90/90-10 டையர்கள் கொண்டுள்ளது. இதன் உயர் ரக மாடலின் முன்பக்கம் 190 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், நடுத்தர மாடலில் 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 130 மில்லிமீட்டர் யுனிட் மற்றும் ஹோன்டாவின் காம்பி-பிரேக் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஹோன்டாவின் பிரபல டியோ மாடலை தழுவி புதிய கிரேசியா வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்க அப்ரானில் டுவின்-பாட் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்வகையான அம்சம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். ஹெட்லைட்டின் மேல் பெரிய இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
கிரேசியா ஸ்கூட்டரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் - 3-ஸ்டெப் இகோ ஸ்பீடு இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பெற்ற முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையையும் கிரேசியா பெற்றுள்ளது.
நியோ ஆரஞ்சு மெட்டாலிக், பியர்ல் நைட்ஸ்டார் பிளாக், பியர்ல் ஸ்பார்டன் ரெட், பியர்ல் அமேசிங் வைட், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், மேட் மார்வெல் புளூ மெட்டாலிக் என ஆறு நிறங்களில் கிடைக்கிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)