‘மூடிஸ்’ நிறுவனம் ஆய்வறிக்கை வாகன சொத்து சார்ந்த கடன் பத்திரங்கள் இந்தியாவில் இழப்பு விகிதம் குறைவு‘மூடிஸ்’ நிறுவனம் ஆய்வறிக்கை வாகன சொத்து சார்ந்த கடன் பத்திரங்கள் ... ... ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்த  காத்­தி­ருக்­கும் சந்தை மாற்­றங்­கள் ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்த காத்­தி­ருக்­கும் சந்தை மாற்­றங்­கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பங்­கு­களை வாங்கும் முன்…
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2017
01:27

முறை­யான ஆய்வு இல்­லாமல் பங்­கு­களை வாங்­கக்­கூ­டாது என்­பது தான், பங்­குச்­சந்தை முத­லீட்டின் பால­பாடம். பங்­குச்­சந்தை பக்கம் உங்கள் பார்வை திரும்­பி­ய­தற்­கான காரணம் என்­ன­வாக இருந்­தாலும் சரி, பங்­கு­களை வாங்கும் முன், அதற்­கு­ரிய ஆய்வு செய்­வது அவ­சியம். இல்லை எனில் பங்கு ஆர்வம் பர­ம­ப­த விளை­யாட்­டாக மாறி­வி­டலாம். கவ­னத்தை ஈர்த்த பங்கு தொடர்­பாக விரி­வான ஆய்வை மேற்­கொண்ட பின்னரே, அதில் முத­லீடு செய்­வது பற்றி தீர்­மா­னிக்க வேண்டும். அடிப்­ப­டை­யான சில கேள்­வி­களில் இருந்து இதை துவங்­கலாம்.

வர்த்­தகம் என்ன?நீங்கள் பங்­கு­களை வாங்க இருக்கும் நிறு­வனம் எத்­த­கைய வர்த்­த­கத்தில் ஈடு­பட்­டி­ருக்­கி­றது? இந்த கேள்­வியில் இருந்து தான், நீங்கள் துவங்க வேண்டும். பங்­குச்­சந்தை முத­லீட்டு வித்­த­க­ரான, வாரன் பப்பே தவ­றாமல் பின்­பற்றும் மந்­தி­ரமும் இது தான். ஒரு நிறு­வனம் என்ன வர்த்­த­கத்தில் ஈடு­பட்­டி­ருக்­கி­றது என்­பது தெளி­வாக தெரி­ய­வில்லை எனில், நீங்கள் அந்த பங்கை வாங்­கு­வதில் அர்த்தம் இல்லை.
‘டிவிடெண்ட்’ உண்டா? நிறு­வனம் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு ‘டிவிடெண்ட்’ வழங்கி வரு­கி­றதா? என்­பதும் அல்­லது குறைந்­த­பட்ச வரு­மான வரியை முறை­யாக செலுத்தி வரு­கி­றதா? என்­பதும் முக்­கி­ய­மாக கவ­னிக்க வேண்­டி­யவை. டிவிடெண்ட் வழங்­கு­வது நிறு­வனம் லாப­மீட்­டு­வதை குறிக்கும். வரு­மான வரி செலுத்தி வந்தால், லாப பாதையில் சென்று கொண்­டி­ருப்­ப­தாக புரிந்து கொள்­ளலாம். டிவிடெண்ட் தரும் பங்­கு­களை வாங்­கு­வது பாது­காப்­பா­னது.
வர­லாறு எப்­படி?நிறு­வன செயல்­பா­டுகள் கடந்த காலங்­களில் எப்­படி இருந்­தி­ருக்­கின்­றன என்­பதை அறிந்து கொள்­வதும் அவ­சியம். அதன் அண்­மைக்­கால காலாண்டு அறிக்­கை­களை வாசித்துப் பார்க்­கலாம். நிறு­வ­னர்­களின் அறிக்­கையில் எதிர்க்­காலம் பற்­றிய தொலை­நோக்கு இருக்­கி­றதா? என, தெரிந்து கொள்­ளலாம். சொன்­ன­படி எல்லாம் நடந்து கொண்­டி­ருக்­கின்­ற­னரா? என்றும் அறி­யலாம்.
நடத்­து­வது யார்?நிறு­வ­னத்தின் நிர்­வா­கத்­திற்கு பொறுப்­பேற்­றி­ருப்­பது யார்... என பார்க்க வேண்டும். நிறு­வ­னத்தின் நிர்­வாக கொள்கை என்ன; திட்­டங்கள் என்ன... போன்ற கேள்­வி­களும் முக்­கி­ய­மா­னவை. தொழில்­மு­றை­யாக மற்றும் சிறந்த முறையில் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கி­றதா? என்­பதை இதன் மூலம் உணர்ந்து கொள்­ளலாம். பிரைஸ் ஏர்னிங் என சொல்­லப்­படும், பி.இ., விகி­தத்­தையும் கவ­னிக்க வேண்டும்.
போட்டி உண்டா?நிறு­வ­னத்தை பற்றி அறிந்தால் மட்டும் போதாது. அதன் போட்­டி­யா­ளர்கள் யார்? அந்­நி­று­வ­னங்­களின் நிலை என்ன என்றும் அறிய வேண்டும். நிறு­வனம் ஏக­போகம் நிலவும் சந்­தையில் இருக்­கி­றதா? முன்­னணி நிறு­வ­னமே 10 சத­வீத சந்தைப் பங்கை கொண்டு உள்ள துறையில் இருக்­கி­றதா? போன்ற விஷ­யங்கள் அதன் வளர்ச்­சியில் தாக்கம் செலுத்தும். வெளி­நாட்டு போட்­டி­யையும் கவ­னிக்க வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)